ருதுராஜ் கெய்க்வாட் - உட்கர்ஷா பவார் திருமணம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனது நீண்ட நாள் காதலியான உட்கர்ஷா பவாரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் - உட்கர்ஷா பவார் திருமணம்
ஐபிஎல் திருவிழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி 590 ரன்கள் குவித்தவர் ருதுராஜ் கெய்க்வாட்.
ருதுராஜ் கெய்க்வாட் - உட்கர்ஷா பவார் திருமணம்
எம்.எஸ்.தோனியின் ஒய்விற்கு பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் - உட்கர்ஷா பவார் திருமணம்
இந்த சீசனில் 5ஆவது முறையாக ஐபிஎல் டிராபியை கைப்பற்றிய சிஎஸ்கே வீரர்கள் தங்களது குடும்பத்தோடு கொண்டாடினர். அதில் ருத்துராஜ் கெய்க்வாட் (ருதுராஜ் கெய்க்வாட்) தனது காதலியான உட்கர்ஷா பவார் உடன் கலந்து கொண்டார்.
ருதுராஜ் கெய்க்வாட் - உட்கர்ஷா பவார் திருமணம்
உட்கர்ஷா பவார், மகாராஷ்டிரா கிரிக்கெட் வீராங்கனை. இவர், ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். புனே பல்கலைக்கழகத்தில் பிட்னெஸ் தொடர்பான படிப்பு படித்து வருவதால், இவர் கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் - உட்கர்ஷா பவார் திருமணம்
இந்த நிலையில் தான் கெய்க்வாட் மற்றும் உட்கர்ஷா பவார் இருவருக்கும் இடையில் திருமணம் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றுள்ளனர்.
ருதுராஜ் கெய்க்வாட் - உட்கர்ஷா பவார் திருமணம்
தனது திருமணம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து விலகினார். இவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற்றுள்ளார். திருமணம் தொடர்பான புகைப்படங்களை ருதுராஜ் கெய்க்வாட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Credits: Ruturaj Gaikwad Instagram Page