ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் நடத்தப்படுகிறது.
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் 2ஆவது போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் கடைசி ஓவரில், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் கேப்டன் அபிஷேக் தன்வர் ஒரு பந்தில் 18 ரன்கள் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்
இந்த ஓவரில் மட்டும் அபிஷேக் தன்வர், 1, 4, 0, 1, நோபால், 1, நோபால், நோபால் + 6, நோபால்+2, வைடு, 6 என்று மொத்தமாக 20 ரன்கள் கொடுத்துள்ளார். இதில் கடைசி பந்தில் மட்டும் 18 ரன்கள் கொடுத்துள்ளார்.
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்
கிரிக்கெட் வரலாற்றில் கடைசி பந்தில் 18 ரன்கள் கொடுத்தது டிஎன்பிஎல் தொடரில் நடந்துள்ளது. அதுவும் ஒரு கேப்டன் இவ்வளவு ரன்கள் கொடுத்தது ஆச்சரியமான ஒன்றாக கருதப்படுகிறது
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்
இதே போன்று திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பா11சி திருச்சி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஒரே பந்தில் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் இருவருமே டிஆர்.எஸ் எடுத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. முதலில் ஆடிய பா11சி திருச்சி 12 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. 13 ஆவது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். அந்த ஓவரின், கடைசி பந்தில் ராஜ்குமார் ஆடினார். அந்த பந்தில் கேட்ச் என்று கேட்கவே நடுவர் அவுட் கொடுத்தார்.
ஒரு பந்தில் 18 ரன்கள், ஒரு பந்தில் 2 டிஆர்எஸ்
ஆனால் பேட்ஸ்மேன் ரெவியூ எடுக்க, அது அவுட் இல்லை என்று வந்தது. இதையடுத்து, மீண்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் டிஆர்.எஸ்.ரெவியூ கேட்டார். அதிலும் அவுட்டில்லை என்று மூன்றாவது நடுவர் கொடுத்தார். இதன் மூலமாக ஒரே பந்தில் பேட்ஸ்மேனும், பவுலரும் இருவருமே ரெவியூ கேட்ட சம்பவம் இந்த டிஎன்பிஎல் தொடரில் முதல் முதலாக நடந்துள்ளது.