1. பென் ஸ்டோக்ஸ் - அடிப்படை விலை ரூ.2 கோடி
இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். சமகாலத்தின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ஸ்டோக்ஸ். 2018 ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு (ரூ.12.5 கோடி) விலைபோன வீரர் ஸ்டோக்ஸ். டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் அசத்தும் வெகுசில வீரர்களில், அதுவும் ஆல்ரவுண்டர்களில் முதன்மையானவர் ஸ்டோக்ஸ். நெருக்கடியான சூழலில் பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சிறப்பாக செயல்பட்டு தனது அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் மேட்ச் வின்னர் ஸ்டோக்ஸ். கேப்டன்சிக்கும் தகுதியான வீரர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிவந்த ஸ்டோக்ஸ் கடந்த சீசனில் ஆடவில்லை. ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடந்த டி20 உலக கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக பொறுப்புடன் பேட்டிங் ஆடி இங்கிலாந்து கோப்பையை வெல்ல உதவியாக இருந்தார். எனவே பென் ஸ்டோக்ஸுக்கு அதிக கிராக்கி இருக்கும்.