டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய அணியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் கணெக்ஷன் இணையத்தில் வைராகி வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. வருகின்ற ஞாயிற்றுக் கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.
25
இங்கிலாந்துக்கு இமாலய டார்கெட்..
முன்னதாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டி செய்த இந்திய பேட்டர்கள் தொடக்கம் முதலே அதிரடி காண்பித்தனர். போட்டியின் இரண்டாவது பாதியில் பனிப் பொழிவு காரணமாக ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறக்கூடுமென்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அதிரடி காட்டி 253 என்ற இமாலய ஸ்கோரைப் பதிவு செய்தனர். இதில் 19 சிக்சர்கள் அடங்கும்.
35
பௌலர்களுக்கு தண்ணி காட்டிய ஜாக்கப் பெத்தெல்
254 ரன்கள் என்ற பிரமாண்ட டார்கெட்டை துரத்தி களம் இறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டுவதில் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் அவர்களும் அதிரடியாக விளையாடினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மிடில் ஆர்டரில் களம் இறங்கிய ஜாக்கப் பெத்தெல் இந்திய பௌலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். வெறும் 48 பந்துகளை மட்டும் எதிர் கொண்ட அவர் 7 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் குவித்த நிலையில் ரன் அவுட்டாகி இந்திய ரசிகர்கள் மத்தியில் தெம்பை உருவாக்கினார்.
ஆனால் இறுதி வரை விட்டுக் கொடுக்காத இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சேஸ் செய்வதில் மும்முரம் காட்டினர். கடைசியாக 20 ஓவர் முடிவில் அந்த அணி 246 ரன்கள் வரை குவித்த நிலையில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
55
Dhoniதல தோனி + 7 + இந்தியா = வெற்றி
இதனிடையே சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரின் திருமணத்திற்காக மும்பையில் முகாமிட்டிருந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் போட்டியை நேரில் காண மைதானத்திற்கு வந்திருந்தனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் தனது மனைவியுடன் வந்திருந்தார். இந்நிலையில் தோனியின் ஜெர்சி நம்பரான 7ஐ குறிப்பிட்டு அவரது ரசிகர்கள் அவர் ஆசிர்வாதத்தால் தான் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்ற தொணியில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.