T20 World Cup Semi Final: இங்கிலாந்தை சிதறடித்த இந்தியா.. 254 ரன்கள் இலக்கு..!

Published : Mar 05, 2026, 08:59 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து பௌலிங்கை நாலாதிசையிலும் பறக்க விட்ட இந்திய வீரர்கள் 20 ஓவர் முடிவில் 253 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை செட் செய்துள்ளனர்.

PREV
13
அதிரடி காட்டிய சஞ்சு

டி20 உலகக்கோப்பைத் தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர்.

23
இந்திய அணி சிக்சர் மழை

குறிப்பாக சஞ்சு சாம்சன் வெறும் வெறும் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும். சிவம் துபே 43, இஷான் கிஷன் 39 ரன்கள் சேர்த்தனர். திலக் வர்மா வெறும் 7 பந்துகளிலும், ஹர்திக் பாண்டியா 12 பந்துகளிலும் 27 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

33
இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்து இமாலய இலக்கைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவிடம் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வலுவான பௌலிங் லைன் அப் இருப்பதால் இந்த ஸ்கோரை சேஸ் செய்வது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories