WI vs IND: முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி! சீனியர் வீரர் கம்பேக்.. அவங்க 2 பேரில் ஒருவர்.. அது யார்?

Published : Jul 29, 2022, 03:47 PM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

PREV
16
WI vs IND: முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி! சீனியர் வீரர் கம்பேக்.. அவங்க 2 பேரில் ஒருவர்.. அது யார்?

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து 3-0 என வென்றது இந்திய அணி.

26

5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று டிரினிடாட்டில் நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

36

ஒருநாள் தொடரில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகிய வீரர்கள் டி20 தொடரில் ஆடுகின்றனர். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ரோஹித்துடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இறக்கப்படுவார். தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக ஆடுவதால் ரிஷப் பண்ட் டாப் ஆர்டரில் இறக்கப்படுவார்.

46

விராட் கோலி ஓய்வில் இருப்பதால், 3ம் வரிசையில் தீபக் ஹூடா/ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார். 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா மற்றும் 6ம் வரிசையில் தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரும் ஆடுவார்கள். 

56

அக்ஸர் படேல் ஸ்பின் ஆல்ரவுண்டராக ஆடுவார். அவருடன் மற்றொரு ஸ்பின்னராக சீனியர் நட்சத்திர ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபாஸ்ட் பவுலர்களாக ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார் மற்றும் இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.
 

66

முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா/ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.
 

Read more Photos on
click me!

Recommended Stories