கோலி, தோனி இல்ல: ஆஸி, டீமில் பார்க்க விரும்பும் இந்திய ஜாம்பவான் யார்? ஸ்டீவ் ஸ்மித் சொன்ன அந்த ஒரு லெஜெண்ட்!

First Published | Sep 16, 2024, 12:32 PM IST

Sachin Tendulkar and Virat Kohli: ஆஸ்திரேலிய அணியில் எந்த இந்திய வீரரை பார்க்க விரும்புகிறீர்கள் என்று ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்டபோது, கோலியை விட சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்துள்ளார். ஸ்மித் மட்டுமின்றி மற்ற ஆஸி வீரர்களும் தங்களுக்கு பிடித்த இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.

Virat Kohli and Sachin Tendulkar

விராட் கோலி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவிலும் அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆக்ரோஷத்துடன் விளையாடக் கூடியவர்களில் கோலி முதலிடம் பிடித்திருப்பார். எப்போதும் மைதானத்தில் ஜாலி மோடிலும், சில சமயங்களில் ஆக்ரோஷ மோடிலும் கோலி காணப்படுவார். இந்திய அணி ஜெயிக்கும் தருவாயில் இருந்தால் கோலி ஜாலியான மோடில் இருப்பார். டான்ஸ், ஆட்டம், பாட்டம் என்று ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

Virat Kohli

இருப்பினும், எந்த வீரரை ஆஸ்திரேலியா அணியில் பார்க்க விரும்புகிறீர்கள் என்று ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ட போது அதற்கு தோனி, விராட் கோலி பெயரை குறிப்பிடாத அவர், சச்சின் டெண்டுல்கரின் பெயரை குறிப்பிட்டார். ஆஸி அணிக்கு எதிராக விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர்.

Latest Videos


Sachin Tendulkar

சச்சின் மற்றும் விராட் கோலி இருவரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக சாதனை படைத்துள்ளனர். ஆஸிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 சதங்கள் உள்பட 2042 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் 8 சதங்கள் உள்பட 2367 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டியில் 794 ரன்கள் எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஆஸிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 சதங்கள் உள்பட 3630 ரன்கள் எடுத்தார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 9 சதங்கள் உள்பட 3077 ரன்கள் எடுத்தார்.

sachin

ஸ்மித்தைப் போன்று மற்ற ஆஸி வீரர்களான மிட்செல் ஸ்டார்க், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன் ஆகியோரும் சச்சினை ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட விரும்பம் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் நாதன் லயன் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் கோலியை தேர்வு செய்துள்ளனர். ஆனா, ஜோஷ் ஹாசில்வுட், ஆஸ்திரேலியாவுக்காக விளையாட விரும்பும் வீரராக ஜஸ்பிரித் பும்ராவை தேர்வு செய்தார்.

Jasprit Bumrah and Border Gavaskar Trophy 2024

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்கிறது. வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது ஜனவரி 7ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஸ்மித் மற்றும் கோலி இருவரும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் கருதப்படுகிறது.  ஆஸ்திரேலியாவில் நடந்த கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!