5 நாள்ல முடிய வேண்டிய மேட்ச் கேவலம் 62 பந்துலேயே முடிஞ்சுது – கிரிக்கெட்டர்ஸ் ரத்த காயங்களுடன் வெளியேற்றம்!

First Published | Sep 16, 2024, 10:29 AM IST

டெஸ்ட் மேட்ச் அப்டினா சாதாரணமா நாலு ஐந்து நாள் ஆடுவாங்க. சில மேட்ச் 4, சில டெஸ்ட் மேட்ச் 3 நாட்களில் முடியும். ஆனா, இப்போ நாம சொல்ல போற டெஸ்ட் மேட்ச் கேவலம் 62 பந்துலேயே முடிஞ்சிடுச்சு. சரித்திரத்துலயே டெஸ்ட் மேட்ச் 62 பந்திலேயே முடிந்ததை பற்றி பார்க்கலாம் வாங்க.

டெஸ்ட் கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்துல 1998ல யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்துச்சு. 4, 5 நாட்களில் முடிய வேண்டிய மேட்ச் கேவலம் 62 பந்துலே முடிஞ்சுது. இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்ல இதுவரைக்கும் நடந்திருக்கிற மிகக் குறைந்த பந்துகளில் முடிஞ்ச மேட்ச். வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிக்கு இடையில நடந்த டெஸ்ட் மேட்ச்சுலதான் இந்த சம்பவம் நடந்துச்சு. 

இதுவரைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்ல மிகக் குறைந்த பந்துகளில் முடிஞ்ச மேட்ச் என்ற பெருமை வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிக்கு இடையில நடந்த மேட்ச்சுக்குத்தான் உண்டு. பயங்கரமான பந்துவீச்சு பிட்ச் காரணமா, பேட்ஸ்மேன் எல்லாம் பேட்டிங் பண்ணவே பயந்து போயிட்டாங்க. ரன் எடுக்குறத விட, தங்கள காப்பாத்திக்கிறதுதான் முக்கியம்னு ஆயிடுச்சு.

வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து

ஆனா, நிறைய பேருக்கு காயம் ஏற்பட்டுச்சு. கிரிக்கெட் ஆட்டக்காரங்களோட ரத்தம் பிட்ச்சுல ஒழுகுற அளவுக்கு போயிடுச்சு. இதனால, இந்த டெஸ்ட் மேட்ச்ச ரத்து செய்யப்பட்டது. ஆபத்தான இந்த பிட்ச்சுல பேட்டிங் பண்ணும்போது, பேட்ஸ்மேன் ரத்தம் சிந்துற நிலைமை ஏற்பட்டது.

இந்த டெஸ்ட் மேட்ச்சுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. இந்த மேட்ச் சபீனா பார்க் மைதானத்துல நடந்துச்சு. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனா, பிட்ச் ரொம்பவே பயங்கரமா இருந்துச்சு. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சுல இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரத்தம் சிந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

Latest Videos


வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து

கேப்டன் மைக் அத்தர்டன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக் ஸ்டீவர்ட் ஆகியோர் இங்கிலாந்து அணி சார்பா ஓபனிங் பேட்டிங் செய்ய வந்தாங்க. அந்த சமயத்துல வெஸ்ட் இண்டீஸ் அணியோட பந்துவீச்சு பயங்கரமானதா இருந்துச்சு. கர்ட்லி ஆம்ப்ரோஸ்-கோர்ட்னி வால்ஷ் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பா பந்துவீச வந்தாங்க.

இந்த இரண்டு பேரும் பந்துவீச வந்ததும், இங்கிலாந்து அணியோட ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவருமே பயந்து போயிட்டாங்க. அவ்வளவு வேகமா பந்து வந்து விழுந்துச்சு. இந்த இரண்டு பேரும் எப்படியாவது தங்களோட உயிர காப்பாத்திக்கணும்னு பார்த்து நின்னாங்க. 

பேட்ஸ்மேன்கள்

இந்த டெஸ்ட் மேட்ச் கேவலம் 10 ஓவர்கள்லேயே முடிஞ்சுது. அன்னைக்கு சபீனா பார்க் மைதானத்துல இருந்த பிட்ச்சு வேற மாதிரி பவுன்ஸ் ஆச்சு. பேஸ் பவுலர்களுக்கு சாதகமா இருந்துச்சு. ஆனா, அதிக பவுன்ஸோட பந்து வேகமா வந்ததால, பந்து நேரா பேட்ஸ்மேன் உடம்புல போய் விழுந்துச்சு.

இதனால, ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாம, மத்த ஆட்டக்காரங்களுக்கும் காயம் ஏற்பட்டுச்சு. பிட்ச்சு ரொம்பவே ஆபத்தான முறையில இருந்துச்சு. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரத்தம் சிந்தி கொண்டிருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ்

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மைதானத்தில் இருந்த நடுவர்கள் ஸ்டீவ் பக்னர்-ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் ஆகியோர் மேட்ச்ச ரத்து செய்யலாம்னு முடிவு செய்தாங்க. ஆனா, நடுவர்கள் இந்த முடிவுக்கு வரும்போது, நேரம் ரொம்பவே ஆகிடுச்சு. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களோட உடம்பு முழுக்க காயம் ஏற்பட்டுச்சு.

பேட்டிங் பண்ண வந்த எல்லாருமே காயத்தோட திரும்பி போனாங்க. பிட்ச்சு அந்த அளவுக்கு மோசமா இருந்துச்சு. நடுவர்களால கேவலம் 62 பந்துகள்லதான் இந்த முடிவுக்கு வர முடிஞ்சுது. மேட்ச் கேவலம் 10.2 ஓவர்ளிலேயே முடிவுக்கு வந்துச்சு. இதுல இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்துச்சு. இதனால, இந்த மேட்ச்சுதான் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்துலயே மிகக் குறைந்த பந்துகள்ல முடிஞ்ச மேட்ச்சு என்ற பெருமைய பெற்றுச்சு. 

click me!