மிகவும் மதிப்புமிக்க இந்திய கிரிக்கெட் வீரராக பும்ராவுக்கு மகுடம் சூடிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

First Published | Sep 15, 2024, 6:38 PM IST

Ravichandran Ashwin and Jasprit Bumrah: ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ராவை மிகவும் மதிப்புமிக்கவர் என்று பாராட்டி, பேட்ஸ்மேன்களை கொண்டாடும் இந்தியாவில் பும்ராவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். 2011 ODI உலகக் கோப்பை வென்ற அஸ்வின், பும்ராவை சாம்பியனாக கருத வேண்டும் என்றும் கூறினார்.

Ravichandran Ashwin

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாட இருக்கிறார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19 ஆம் தேதி சொந்த மைதானமான சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஹோம் தொடரின் தொடக்கத்திற்கு முன்னதாக, 37 வயதான அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 517 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் தான் அஸ்வின், 30 வயதான ஜஸ்பிரித் பும்ராவுக்கு பெரிய பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவரை மிகவும் மதிப்புமிக்கவர் என்று அழைத்தார். அஸ்வினின் கூற்றுப்படி பேட்ஸ்மேன்களை கொண்டாடும் இந்திய நாட்டில், பும்ராவை கொண்டாடியதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார். அவரைப் பொறுத்த வரையில் 2011 ODI உலகக் கோப்பை வென்ற அஸ்வின், பும்ராவை சாம்பியனாக கருத வேண்டும் என்றார்.

Jasprit Bumrah, Indian Cricket Team

தனது யூடியூப் சேனல் ஒன்றில் பத்திரிக்கையாளர் விமர் குமாரிடம் பேசிய அஸ்வின் கூறியிருப்பதாவது: எப்போதும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடாகவே இந்தியா இருந்து வருகிறது. அப்பயிருந்தும் நான் பும்ராவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பும்ரா ஒரு தலைமுறை பந்து வீச்சாளர். சென்னை வாசிகளான நாங்கள் பந்து வீச்சாளர்களை மிகவும் பாராட்டுகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு பும்ரா ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னைக்கு வந்திருந்தார்.

சென்னை மக்களாகிய நாங்கள் பவுலர்களை அழகாக நடத்துகிறோம். பும்ராவை சாம்பியனாக நடத்த வேண்டும். பும்ரா இப்போது மிகவும் மதிப்புமிக்க இந்திய கிரிக்கெட் வீரர் என்றார். காயம் காரணமாக 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பும்ரா இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு காயத்திலிருந்து மீண்டு வந்து அணிக்கு திரும்பினார்.

Tap to resize

Team India, Ravichandran Ashwin

2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை எடுத்தார். 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பும்ரா 19 விக்கெட்டுகள் எடுத்தார். இங்கிலாந்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கியதைத் தொடர்ந்து ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியில் பும்ரா நம்பர் 1 இடம் பிடித்தார்.

Jasprit Bumrah As Most Valuable Indian Cricket Player

இங்கிலாந்து தொடரை தொடர்ந்து கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு இந்தியா டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரும் 19 ஆம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டனர்.

Jasprit Bumrah and Ravichandran Ashwin

இதில், பும்ராவும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற பும்ரா 8 போட்டிகளில் விளையாடி15 விக்கெட்டுகள் எடுத்தார். இதில் சிறப்பான பங்களிப்பை அளித்ததைத் தொடர்ந்து பும்ரா தொடர் நாயகன் விருது வென்றார்.

Latest Videos

click me!