#AUSvsIND சச்சின், சேவாக் சாதனையை தகர்த்தெறிந்த ஸ்டீவ் ஸ்மித்

First Published | Jan 18, 2021, 6:09 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே பிரிஸ்பேனில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் அடித்தார். அதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் ஸ்மித்.
7500 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லை விரைவில் எட்டிய வீரர் என்ற சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகிய இருவருமே 144வது டெஸ்ட் இன்னிங்ஸில் 7500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில், ஸ்மித் 139வது இன்னிங்ஸிலேயே 7500 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி சச்சின் மற்றும் சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

Latest Videos

click me!