#AUSvsIND டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5வது இந்திய பவுலர் முகமது சிராஜ்..! அறிமுக தொடரிலேயே அபார சாதனை

First Published Jan 18, 2021, 3:21 PM IST

ஆஸி.,க்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ், எலைட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே பிரிஸ்பேனில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி, முதல் இன்னிங்ஸில், 369 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூரின் பொறுப்பான அரைசதத்தாலும், அவர்களின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பாலும் முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் அடித்தது.
undefined
33 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி., அணி 294 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் இணைந்து ஆஸி., அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்தனர். சிராஜ் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளையும், தாகூர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
undefined
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிராஜுக்கு இது முதல் ஐந்து விக்கெட். அறிமுக தொடரிலேயே, அதுவும் ஆஸ்திரேலியாவில் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சிராஜ். அதுவும் ஏதோ ஐந்து பேட்ஸ்மேன்கள் அல்ல. ஆஸி., அணியின் முக்கியமான வீரர்களான லபுஷேன், ஸ்மித், மேத்யூ வேட் ஆகிய மூவரையும் மற்றும் ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகிய டெயிலெண்டர்களையும் வீழ்த்தினார்.
undefined
பிரிஸ்பேனில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் எலைட் லிஸ்ட் ஒன்றில் சேர்ந்துள்ளார் சிராஜ். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பிரிஸ்பேனில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்திய, ஐந்தாவது இந்திய பவுலர் சிராஜ் தான்.
undefined
இதற்கு முன், எரப்பள்ளி பிரசன்னா (1968ல் 6104), பிஷன் சிங் பேடி(1977ல் 557), மதன் லால்(1977ல் 572), ஜாகீர் கான்(2003ல் 595) ஆகிய நால்வரும் பிரிஸ்பேனில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், இந்த பட்டியலில் ஐந்தாவது பவுலராக முகமது சிராஜ்(573) சேர்ந்துள்ளார்.
undefined
click me!