இந்நிலையில், அந்த மாதிரியான விமர்சனங்களுக்கு, 2ம் நாள் ஆட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்தபோது பதிலளித்தார் ரோஹித் சர்மா. தனது ஷாட் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, எவ்வளவு தூரம் அடிக்க நினைத்தேனோ அந்த ஷாட்டில் அந்து தூரம் கிடைத்தது. ஆனால் எங்கு அடிக்க நினைத்தேனோ அங்குதான் பந்து சரியாக செல்லவில்லை. லாங் ஆன் மற்றும் டீல் ஸ்கொயர் லெக் திசைக்கு இடையே அடிக்க நினைத்தேன். நான் எப்படி அடிக்க நினைத்தேனோ அது சரியாக கனெக்ட் ஆகவில்லை. ஆனால் நான் ஆடிய விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அந்த ஷாட்டிற்காக நான் வருந்தவில்லை. நான் களத்தில் நிலைத்த பின்னர், அடித்து ஆடி பவுலர்கள் மீது அழுத்தம் போடுவதுதான் இந்த அணியில் எனது பணி. அதைத்தான் செய்தேன். அதனால் வருந்தவில்லை என்று ரோஹித் சர்மா நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டார்.