ஐபிஎல் தொடரில் இவர்கள் டாப்பில் வருவார்கள்: கங்குலி வெளியிட்ட 5 இளம் வீரர்கள் பட்டியல்!

Published : Feb 26, 2023, 11:32 AM IST

பிருத்வி ஷா முதல் உம்ரான் மாலிக் வரையில் இந்த ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களின் பட்டியலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி வெளியிட்டுள்ளார்.  

PREV
18
ஐபிஎல் தொடரில் இவர்கள் டாப்பில் வருவார்கள்: கங்குலி வெளியிட்ட 5 இளம் வீரர்கள் பட்டியல்!
சௌரவ் கங்குலி - ஐபிஎல் 2023

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 16ஆவது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரின் அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

28
ஐபிஎல்

ஒரேயொரு முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் வாழ்க்கை செட்டில் என்ற நிலை தற்போது வந்துவிட்டது. ஐபிஎல் தொடரில் விளையாடி பல வீரர்கள் இன்று பிரபலமடைந்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி உள்ளிட்ட ஜாம்பவான்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விடை பெறும் நிலையில் இனி வரும் சீசன்களில் ஐபிஎல் தொடரில் யாரெல்லாம் சாதிப்பார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 
 

38
சௌரவ் கங்குலி

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி டி20 போட்டியில் சிறந்த வீரர் என்றால் அது சூர்யகுமார் யாதவ் தான். ஆனால், அவருக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது.
 

48
பிருத்வி ஷா

ஐபிஎல் தொடரில் 63 போட்டிகளில் விளையாடிய பிருத்வி ஷா திறமை வாய்ந்தவராக திகழ்கிறார். அவர் 12 அரைசதம் உள்பட 1588 ரன்கள் குவித்துள்ளார். அடுத்ததாக ரிஷப் பண்ட்டை, கங்குலி தேர்வு செய்துள்ளார். ரிஷப் பண்ட்க்கு 25 வயது தான் ஆகிறது. 
 

58
ரிஷப் பண்ட்

இதுவரையில் ரிஷப் பண்ட் 98 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2838 ரன்கள் குவித்துள்ளார். கடந்த சீசனில் மட்டும் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 340 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக நடந்த கார் விபத்து காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் அவர் விளையாடமாட்டார்.
 

68
ருத்துராஜ் கெய்க்வாட்

மூன்றாவதாக கங்குலி வெளியிட்ட பட்டியலில் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட். இதுவரையில் 36 போட்டிகளில் விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட் ஒரு சதம், 10 அரைசதம் உள்பட 1207 ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த இந்திய வீரர் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
 

78
சுப்மன் கில்

நான்காவதாக இடம் பெற்றவர் சுப்மன் கில் சிறந்த வீரராக இருப்பார். இதற்கு முன்னதாக ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
 

88
உம்ரான் மாலிக்

இவர் மட்டும் உடல் தகுதியுடன் இருந்தால் ஐபிஎல் தொடரில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கங்குலி தெரிவித்துள்ளார். கங்குலியின் இந்தப் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories