இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த தொடர் கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி அந்தளவிற்கு ஆடவில்லை. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவிடம் மண்டியிட்டு சரணடைந்து படுதோல்விகளை அடைந்து, இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இப்போது, அந்த அணி ஒயிட்வாஷ் ஆகாமல் தடுக்க போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் ஜெயிக்க ஸ்பின் தான் முக்கியமான அஸ்திரம் என்பதை உணர்ந்து நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன், அஷ்டான் அகர் என 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி, முதல் டெஸ்ட்டில் அணி தேர்வில் தவறிழைத்துவிட்டது. 2வது டெஸ்ட்டில் அந்த அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஸ்பின்னை பயன்படுத்துவதில் ஓரளவிற்கு தேறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் கோட்டைவிட்டது.
நீங்களும் தான் பேட்டிங் ஆடுறீங்க! ரோஹித் சர்மா ஆடுறத பார்த்து கத்துக்கங்க! ஆஸி., வீரர்களுக்கு மைக் ஹசி அட்வைஸ்
முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி வியூகங்களில் கோட்டைவிட்டதாகவும், அந்த அணி அதன் பலத்திற்கு ஆடவேண்டும் என்றும் கிரேக் சேப்பல் கருத்து கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய கிரேக் சேப்பல், இவாண்டர் ஹோலிஃபீல்டுடனான மோதலுக்கு முன் பாக்ஸிங் வீரர் மைக் டைசன் ஒன்று சொன்னார்.. அதாவது, முகத்தில் குத்து வாங்கும் வரை ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும் என்று மைக் டைசன் கூறினார். எனக்கு ஆஸ்திரேலிய அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதை பார்க்கையில் அதுதான் நினைவிற்கு வருகிறது. ஆஸ்திரேலிய முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன் தங்களை தாங்களே குத்திக்கொண்டனர். அது திட்டமிடல் தான். திட்டமிடுவது முக்கியம்; ஆனால் அதை ஒரு குறைபாடுள்ள முன்மாதிரியின் அடிப்படையில் செய்வது பயனற்றது.
ஏதாவது பண்ணுங்க பாஸ்.. இல்லைனா எங்க பசங்க உங்களை பொட்டளம் கட்டிருவாங்க..! ஆஸி., அணிக்கு ஸ்ரீகாந்த் எச்சரிக்கை
ஆஸ்திரேலிய அணி அவர்களது பலத்திற்கு ஆடவேண்டும். ஆஸ்திரேலிய அணியின் பலம் ஸ்பின் பவுலிங் அல்ல. இந்தியாவில் ஆடுகிறோம் என்பதற்காக ஸ்பின்னர்களை அதிகமாக எடுப்பது, இந்தியாவில் ஜெயிப்பதற்கு எந்தவிதத்திலும் உதவாது. ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் தான். அந்தவகையில், அணியின் சிறந்த ஃபாஸ்ட்பவுலர்களை ஆடவைத்து அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடி அவர்களுக்கு பலம் சேர்க்க வேண்டும் என்று கிரேக் சேப்பல் தெரிவித்தார்.