டெல்லி டெஸ்ட்டில் இந்தியா விரித்த வலையில் சிக்கிக் கொண்டேன் - பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்!

First Published Feb 25, 2023, 1:07 PM IST

டெல்லி டெஸ்ட் போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்து நடக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்று ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா

ஏற்கனவே நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களில் ஒருவர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய மைதானங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் இவர் மட்டுமே.

இந்தியா - ஆஸ்திரேலியா

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்து முடிந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோப்ம் முதல் இன்னிங்ஸில் 72 ரன்களும் (நாட் அவுட்), 2ஆவது இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்.

இந்தியா

இது குறித்து பேசிய அவர், சுழற்பந்து வீச்சை எப்படி எதிர கொள்ள வேண்டும் என்பதை நான் ரஹானேயிடமிருந்து கற்றுக் கொண்டேன். இதற்கு முன்னதாக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது ரஹானே சுழற் பந்து வீச்சை சிறப்பாக விளையாடிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆஸ்திரேலியா

ரஹானே பேக்புட்டை பயன்படுத்தி ரன்கள் சேர்த்தார். இந்த யுக்தியை யாராவது எனக்கு கற்றுக் கொடுத்தால் என்னாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று எனக்கு தோன்றியது. டெல்லி டெஸ்ட் போட்டியில் என்னை எளிதில் வீழ்த்திவிட்டார்கள்.

பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்

நான் ரன் அடிக்க ஏதுவான வழியை அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஆனால் பொறுமையாக நின்று பவுண்டரிகளை அடிக்காமல் வெறும் சிங்கிளாக ரன்கள் சேர்த்தேன். ஆனால் அவர்கள் சுலபமாக பவுண்டரி அடி என்று என் ஆசையை தூண்டும் வகையில் சுலபமான பந்தை வீசினார்கள். இந்த வலையில் நான் மாட்டிக் கொண்டேன்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா

டெல்லி டெஸ்ட் போட்டியில் மைதானம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து தான் அதற்கேற்ப நான் விளையாடினேன். ஆனால், என்னை அவர்களது வலையில் சிக்க வைத்துவிட்டார்கள். அடுத்த டெஸ்ட் போட்டியில் மன ரீதியாக வலுவாக இருந்து எனது ஆட்டத்தை ஆட வேண்டும். நாங்கள் எங்களது பேட்டிங் ஆர்டரை நம்புகிறோம்.

டெல்லி டெஸ்ட்

டெல்லி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடிய நாங்கள் 2ஆவது இன்னிங்ஸில் எங்களது ஆட்டத்தை கோட்டைவிட்டு விட்டோம். அதிலிருந்து மீண்டு அடுத்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என்று பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் தெரிவித்துள்ளார்.

click me!