5 முறை டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா மகளிர் அணி: 6ஆவது முறையாக கோப்பையை வெல்லுமா?

Published : Feb 26, 2023, 09:52 AM IST

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடக்கிறது.  

PREV
111
5 முறை டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா மகளிர் அணி: 6ஆவது முறையாக கோப்பையை வெல்லுமா?
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டி20 இறுதிப் போட்டி

தென் ஆப்பிரிக்காவில் நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இன்றுடன் முடிகிறது. குரூப் ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
 

211
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டி20 இறுதிப் போட்டி

இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளன. இதன் மூலம் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
 

311
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டி20 இறுதிப் போட்டி

ஆஸ்திரேலியா மகளிர் அணி:

அலைஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேகான் ஸ்கட், டார்ஸி பிரௌன்.
 

411
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டி20 இறுதிப் போட்டி

தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி:

லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மாரிஸான் கேப், சுன் லூஸ் (கேப்டன்), க்ளோ ட்ரயான், நாடின் டி கிளெர்க், அனெகெ பாஷ், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காகா, நோன்குலுலெகோ லாபா.
 

511
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டி20 இறுதிப் போட்டி

இதுவரையில் நடந்து முடிந்த 7 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா 5 முறை சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. தற்போது 8ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிப் போட்டிக்கு தயாராகியுள்ளது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதுகின்றனர். ஏற்கனவே 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, 6ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 
 

611
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டி20 இறுதிப் போட்டி

ஆனால், சொந்த மண்ணில் நடக்கும் டி20 உலகக் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இன்று களமிறங்குகிறது. இதற்கு முன்னதாக நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர்களில் தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிப் போட்டியிலேயே வெளியேறியிருந்தது. 
 

711
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டி20 இறுதிப் போட்டி

தற்போது முதல் முறையாக அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதுவே தென் ஆப்பிரிக்கா அணிக்கு சாதமாக அமைந்துள்ளது. இதன் மூலமாக இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

811
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டி20 இறுதிப் போட்டி

டி20 போட்டியில் ஆஷ்லே கார்ட்னெர், மெக் லானிங், அலைஸா ஹீலி ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள நிலையில், தொடர் நாயகிக்கான சிறந்த வீராங்கனையை தேர்வு செய்யும் விதமாக ஐசிசி 9 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு, ஓட்டிங் முறையில் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்கிறது. இதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லே கார்ட்னெர், மெக் லானிங் (கேப்டன்) மற்றும் அலைஸா ஹீலி (விக்கெட் கீப்பர்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 

911
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டி20 இறுதிப் போட்டி

இதே போன்று தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டாஸ்மின் பிரிட்ஸ் மற்றும் லாரா வோல்வார்ட் ஆகியோர் தொடர் நாயகிக்கான சிறந்த வீராங்கனைக்கான 9 பேர் கொண்ட ஓட்டிங் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

1011
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டி20 இறுதிப் போட்டி

இதற்கு முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெக் லானிங் அதிகபட்ச ரன்கள் (65 பந்துகளில் 126 ரன்கள்) அடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்திருந்தார். மேலும், இந்த ஆண்டில் சிறப்பாக பந்து வீசியவர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (3 ஓவர்கள் 12 ரன்கள் 5 விக்கெட்) படைத்துள்ளார்.
 

1111
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டி20 இறுதிப் போட்டி

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடர் நாயகிக்கான விருதை ஆஸ்திரேலியாவின் அலைஸா ஹீலி (225 ரன்கள்) தட்டிச் சென்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு பெத் மூனி (259 ரன்கள்) தொடர் நாயகியானார். இந்த ஆண்டு பட்டியலில் மெக் லானிங், அலைஸா ஹீலி, ஆஷ்லே கார்ட்னெர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories