சாங்கிலியில் உள்ள பண்ணை வீட்டில் இன்று அதிகாலையிலையே திருமணத்துக்கான ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், திருமணத்துக்கு முன்பாக ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சீனிவாஸுக்கு திடீரென மாரடைப்பு நடந்தது.
அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை
இதனால் ஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சலின் திருமணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தந்தை குணமடையும் வரை திருமணம் வேண்டாம் என்று ஸ்மிருதியும், அவரது வருங்கால கணவருமான பலாஷ் முச்சல் தெரிவித்ததால் இரு வீட்டாரும் திருமணத்தை ஒத்தி வைத்துள்ளனர்.
ஸ்மிருதியும், அவரது குடும்பத்தினரும் மருத்துவனைக்கு சென்றனர். சீனிவாஸின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.