தொடக்க வீரர் ஜாக் கிராலி ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். சிறிது தாக்குப்பிடித்த பென் டக்கெட் (21) ஸ்டார்க் பந்தில் எல்.பி.டள்யூ ஆனார். தொடர்ந்து ரன் மெஷின் ஜோ ரூட்டும் ஸ்டார்க் பந்தில் டக் அவுட் ஆக இங்கிலாந்து அணி 39/3 என பரிதவித்தது.
பின்பு அதிரடியாக விளையாடிய ஆலிவ் போப் (46 ரன்) கிரீன் பந்தில் வெளியேறினார். கேப்டன் பென் ஸ்டோக்ஸும் (6) வந்த வேகத்தில் ஸ்டார்க் பந்தில் காலியானர்.
172 ரன்களுக்கு ஆல் அவுட்
ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் ஹாரி ப்ரூக் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி அரைசதம் (51 ரன்) அடித்தார். அவர் டாகெட் பந்தில் அவுட்டானவுடன் இங்கிலாந்தின் மீதமிருக்கும் விக்கெட்டுகளும் சீட்டுக்கட்டு போல் சரிந்தன.
ஜேமி ஸ்மித் (33) தவிர கஸ் அட்கின்சன் (1), பிரைடன் கார்ஸ் (6), ஜோப்ரா ஆர்ச்சர் (0) சொற்ப ரன்னில் வெளியேறியதால் வெறும் 32.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.