Shubman Gill Wins ICC July Month Best Player Award
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்து சாதனை படைத்தது. சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட அணி இந்த சாதனையை நிகழ்த்தியது. இந்திய அணி தொடரை வெல்ல கேப்டன் சுப்மன் கில் முக்கிய பங்கு வகித்தார். இரட்டை சதத்துடன் 754 ரன்கள் குவித்து மலைக்க வைத்த அவர் கேப்டன்சியிலும் அசத்தினார்.
24
ஐசிசி விருது வென்ற சுப்மன் கில்
இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ஜூலை மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது சுப்மன் கில்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் வியான் முல்டரை முந்தி சுப்மன் கில் இந்த விருதை பெற்று அசத்தியுள்ளார். இத்துடன் ஐசிசியின் 4 மாத விருதுகளை கில் பெற்றுள்ளார்.
34
சுப்மன் கில் மகிழ்ச்சி
சுப்மன் கில் இதற்கு முன்பு ஜனவரி 2023, செப்டம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2025 இல் ஐ.சி.சி.யின் மாத வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ''ஜூலை மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதை பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கேப்டனாக எனது முதல் டெஸ்ட் தொடரில் எனது செயல்திறன் காரணமாக இந்த விருது வந்திருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பர்மிங்காமில் அடித்த இரட்டை சதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக என்றென்றும் எனது நினைவில் இருக்கும்'' என்று சுப்மன் கில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சுப்மன் கில், ''இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனக்கு ஒரு கேப்டனாக எனக்கு நிறைய அனுபவத்தை கற்றுக் கொடுத்தது. மேலும் இந்த தொடரின் இரு அணிகளிலிருந்தும் சில சிறந்த ஆட்டங்கள் இருந்தன. இரு அணி வீரர்களும் இதை நீண்ட காலமாக நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக நடுவர் மன்றத்திற்கும், இந்த அற்புதமான தொடரின் போது என்னுடன் இருந்த எனது அணியினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
வரவிருக்கும் சீசனில் எனது ஃபார்மைத் தொடரைத் தொடரவும், நாட்டிற்கு மேலும் பல விருதுகளை கொண்டு வரவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார். இங்கிலாந்து வீராங்கனை சோபியா டன்க்லி ஜூலை மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.