AUS vs SA T20: Dewald Brevis Hits 41BallT20 Century
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. அந்த அணியின் 22 வயதான இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் 41 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
24
41 பந்துகளில் சதம் விளாசிய டெவால்ட் பிரெவிஸ்
ஹேசில்வுட், சீன் அப்போட், ஆடம் ஜாம்பா பந்துகளில் சிக்சர் மழை பொழிந்த டெவால்ட் பிரெவிஸ், 12 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் வெறும் 56 பந்தில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் டெவால்ட் பிரெவிஸின் முதல் டி20 சதம் இதுவாகும். இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் தடுமாறியது. 57 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ரையன் ரிக்லெட்டன் (14) பென் ட்வார்ஷிஸின் பந்தில் டிம் டேவிட்டிடம் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.
34
தென்னாப்பிரிக்கா ரன்கள் குவிப்பு
அடுத்து கேப்டன் எய்டன் மார்க்ரமும் 18 ரன்கள் எடுத்து க்ளென் மேக்ஸ்வெல் பந்தில் அவுட் ஆனார். லுவான் டிரே பிரிட்டோரியஸுக்கு 10 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆனார். பின்னர் பிரேவிஸ் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (31) ஜோடி 126 ரன்கள் சேர்த்தது. இந்த கூட்டணிதான் தென்னாப்பிரிக்கா பெரிய ஸ்கோர் அடிகக் உதவியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் ட்வார்ஷிஸ், க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டெவால்ட் பிரெவிஸ் தனது அதிரடியான பேட்டிங் பாணிக்காக 'பேபி டி வில்லியர்ஸ்' என்று அழைக்கப்படுகிறார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் அங்கும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் எந்த தென் ஆப்பிரிக்க வீரரும் இவ்வளவு வேகமாக சதம் அடித்ததில்லை. இப்போது 'பேபி' டி வில்லியர்ஸ் டி20 சர்வதேச போட்டியில் சதம் அடித்த இளம் தென் ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.