கிரிக்கெட்டில் தன்னுடைய கனவு 6 பந்தில் 6 சிக்சர் அடிப்பது தான் என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்தும் பேசியுள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன். இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் தன்னுடைய கிரிக்கெட் கனவு குறித்து பேசிய அவர், ''கிரிக்கெட்டில் என்னுடைய கனவு ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசுவது தான்'' என்றார். சஞ்சு சாம்சனின் இந்த பேச்சு, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
24
சஞ்சு சாம்சனின் கனவு இதுதான்
ஏனெனில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் ஒரே ஓவரில் ஐந்து சிக்சர்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் சஞ்சு சாம்சன். ஆகையால் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் போன்று சஞ்சு சாம்சானாலும் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்க முடியும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகி சிஎஸ்கேவில் இணையப் போவதாக தகவல் பரவி வந்தது.
34
ராஜஸ்தான் அணியில் இருந்து விலக முடிவா?
இது குறித்து விளக்கம் அளித்த சஞ்சு சாம்சன், ''கேரளாவில் ஒரு கிராமத்தில் இருந்து வந்த ஒரு சிறுவனுக்கு அங்கீகாரம் அளித்தது ராஜஸதான் ராயல்ஸ் அணி நிர்வாகமும், ராகுல் டிராவிட்டும் தான். ராஜஸ்தான் வீரர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது. அது ஒரு குடும்பம் போல இருந்தது. 2022, 2023, 2024 சீசன்கள் எனது ஐபிஎல் வாழ்க்கையில் சிறந்தவை.
நாங்கள் சில போட்டிகளில் விளையாடினோம், ஒன்றாகப் போராடினோம். சில போட்டிகளில் தோற்றோம், இறுதிப் போட்டியிலும் தோற்றோம். ஆனால் அந்த உறவு, அந்த ஒற்றுமை இனி ஒருபோதும் வராது என்று நினைக்கிறேன். அது என் நினைவில் என்றும் இருக்கும்.'' என்று தெரிவித்தார்.
ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், ''நான் ராஜஸ்தான் ராயல்ஸில் டிரையல்ஸுக்கு வந்தபோது அவர் (டிராவிட்) கேப்டனாக இருந்தார். நான் டிராவிட் கீழ் விளையாடினேன், அரையிறுதிக்குச் சென்றோம். நான் நன்றாக விளையாடினேன். பின்னர் அவர் இந்தியா ஏ பயிற்சியாளரானார். அங்கேயும் நான் நன்றாக விளையாடினேன்.
கடந்த 10-12 ஆண்டுகளாக அவர் என்னுடன் இருக்கிறார் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம், பதில் சொல்ல அவர் எப்போதும் இருந்தார். அதற்கு மேல் நான் ஒருபோதும் ராஜஸ்தானின் கேப்டனாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அங்கும் அவர் பயிற்சியாளராக வருகிறார். அது ஒரு விசித்திரமான திருப்பம்'' என்று கூறியுள்ளார்.