ரோஹித் - டிராவிட்டின் ஸ்மார்ட்டான மூவ் இதுதான்! உலகின் தலைசிறந்த பவுலருக்கு கம்பேக் வாய்ப்பு- சக்லைன் முஷ்டாக்

First Published Aug 26, 2022, 6:08 PM IST

ரவிச்சந்திரன் அஷ்வினை மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியில் எடுத்தது, ராகுல் டிராவிட் - ரோஹித்தின் சிறப்பான முடிவு என்று பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக் பாராட்டியுள்ளார். 
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடக்கிறது. அதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
 

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.

இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்.! ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட சீனியர் வீரர்
 

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வின் தோனி தலைமையிலான இந்திய அணியில் முன்னணி ஸ்பின்னராக ஜொலித்தவர்.

கோலி கேப்டனானதும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மீது ஆர்வம் காட்டினார். அதனால் குல்தீப் - சாஹல் ஜோடிக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. 

அதனால் அஷ்வின் - ஜடேஜா ஓரங்கட்டப்பட்டனர். ஆனால் ஜடேஜா சீக்கிரமாகவே மீண்டும் கம்பேக் கொடுத்தார். அஷ்வினுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்கான அணியில் கம்பேக் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணியின் பெரிய குறை இதுதான்..! அதைக்கூட கண்டுபிடிக்காமல் ஆட வந்துட்டாங்க

ஆனால் அதன்பின்னர் மீண்டும் வெள்ளைப்பந்து போட்டிகளுக்கான அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில் சீனியர் ஸ்பின்னரான அஷ்வின் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். 
 

இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக், 2 விதமான பவுலர்கள் இருக்கிறார்கள். சிலர் ரன் கொடுக்காமல் பந்துவீசி ஸ்கோரை கட்டுப்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். வேறு சிலர் விக்கெட் வீழ்த்துவார்கள். இப்போதைய கிரிக்கெட் சூழலில் இவை இரண்டையும் செய்யவல்ல ஒரே பவுலர் அஷ்வின் தான். அவரை வெள்ளைப்பந்து போட்டிகளுக்கான அணியிலிருந்து ஓரங்கட்டியது தவறு. அவர் உலகத்தரம் வாய்ந்த சிறந்த பவுலர். இப்போது மீண்டும் இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளார். கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரை எடுக்க வைத்திருக்கிறார்கள் என்று சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.
 

click me!