டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் சொதப்பினார். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர்.
டி20 உலககோப்பையில் இந்தியா, நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், மீண்டும் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் இன்றைய ஆட்டத்திலும் தனது வாய்ப்பை வீணடித்துள்ளார். அதாவது நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
23
3 சிக்சர் அடித்து சஞ்சு சாம்சன் அவுட்
நம்பிக்கையுடன் தனது இன்னிங்ஸை தொடங்கிய சஞ்சு சாம்சன் பென் ஷிகோங்கோவின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து நல்ல நிலையில் இருந்தார். ஆனால் அடுத்த பந்தில் தேவையற்ற ஷாட் ஆடி டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முழுவதும் சஞ்சு சாம்சன் படுமோசமாக விளையாடியுள்ளார்.
படுமோசமான பார்ம்
பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் கடுமையாக சொதப்பினார். அந்த தொடரின் 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட அவர் 25 ரன்களை தாண்டவில்லை. விக்கெட் கீப்பிங்கிலும் பந்துகளை சரிவர பிடிக்காமல் திணறினார். அதுவும் பவர்பிளே முடிவதற்குள் சஞ்சு சாம்சன் அவுட் ஆன விதம் பெரிதும் விவாதப்பொருளானது.
33
ரசிகர்கள் ஆத்திரம்
இந்த நிலையில் தான் அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் இன்றைய போட்டியில் விளையாட முடியவில்லை. இதனால் தான் சஞ்சு சாம்சஞுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த வாய்ப்பையும் கோட்டை விட்டு சொதப்பியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் சஞ்சு சாம்சனை வறுத்தெடுத்து வருகின்றனர். ''இவருக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கிறீர்கள்? கத்துக்குட்டியான நமீபியாவிடம் தனது விக்கெட்டை தூக்கி கொடுக்கிறார். இவரை உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்க வேண்டும்'' என்று ரசிகர்கள் ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர்.