கிரிஷ் பகத் வீசிய கடைசி ஓவரில், சஞ்சு சதம் அடிக்க 15 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தையே சிக்ஸருக்குப் பறக்கவிட்டு 90 ரன்களைக் கடந்தார். அடுத்த இரண்டு பந்துகளில் சிங்கிள் எடுக்கவில்லை. நான்காவது பந்தில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்தார். அப்போது அவர் 97 ரன்களில் இருந்தார்.
ஐந்தாவது பந்திலும் சிங்கிள் எடுக்க மறுத்தார்.கடைசிப் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதத்தை நிறைவு செய்ததோடு, சென்னை அணிக்கு ஒரு வலுவான ஸ்கோரையும் பெற்றுத் தந்தார். சஞ்சுவுக்கு அடுத்தபடியாக, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எடுத்த 22 ரன்களே அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
டெவால்ட் பிரெவிஸ் 11 பந்துகளில் 21 ரன்களும், கார்த்திக் ஷர்மா 19 பந்துகளில் 18 ரன்களும், ஜேமி ஓவர்டன் 7 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில், கன்சஃபர் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அஷ்வினி குமார் 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.