Vaibhav Suryavanshi: ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை! மேக்ஸ்வெல் ரெக்கார்டு ஊதி தள்ளிய 15 வயதான இளம் வீரர் வைபவ்!

Published : Apr 23, 2026, 11:48 AM IST

Vaibhav Suryavanshi: ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் சாதனையை 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இவர் முறியடித்துள்ளார். இவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

PREV
16
ஐபிஎல்லில் புதிய சாதனை படைத்த வைபவ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.

26
லக்னோவுக்கு எதிரான போட்டி சொற்ப ரன்களில் அவுட்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பிரின்ஸ் யாதவ் வீசிய இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து வைபவ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆனால், இந்தப் போட்டியில் அவரால் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. 11 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்தபோது, மொஹ்சின் கான் பந்துவீச்சில் வைபவ் ஆட்டமிழந்தார்.

36
வைபவ் வெறும் 222 பந்துகளில் 500 ரன்கள்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான்  15 வயது கொண்ட வைபவ் இந்த வரலாற்றுச் சாதனையைச் செய்துள்ளார். இதன்மூலம், ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் சாதனையை இவர் முறியடித்துள்ளார். வைபவ் வெறும் 222 பந்துகளில் 500 ரன்கள் என்ற இலக்கை கடந்தார்.

46
மேக்ஸ்வெல்லின் சாதனை முறியடிப்பு

இதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் 260 பந்துகளில் இந்த சாதனையைச் செய்திருந்தார். தற்போது, வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால் மேக்ஸ்வெல்லின் அந்த ரெக்கார்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

56
7 போட்டிகளில் 254 ரன்கள்

இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 254 ரன்கள் எடுத்துள்ளார். 78 ரன்கள் இவருடைய அதிகபட்ச ஸ்கோர் ஆகும். வைபவ் 36.28 சராசரி மற்றும் 220.86 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

66
புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் ராஜஸ்தான்
இந்த சீசனில் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளுடன் சிறப்பாகத் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. தற்போது, ராயல்ஸ் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபுறம், லக்னோ அணி 7 போட்டிகளில் 5 தோல்விகளுடன், வெறும் 4 புள்ளிகளுடன் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Read more Photos on
click me!

Recommended Stories