IND vs SA 5th T20: ஒருவழியாக 5வது டி20 போட்டியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அவர் 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஐந்தாவது டி20 போட்டியின் போது நடுவர் ரோஹன் பண்டிட் காயமடைந்தார். டோவோன் ஃபெரீரா வீசிய ஒன்பதாவது ஓவரின் நான்காவது பந்தில் இந்த சம்பவம் நடந்தது. அதாவது ஃபெரீரா வீசிய பந்தை சஞ்சு சாம்சன் மிக வலுவாக நேராக அடித்தார். மின்னல் வேகத்தில் சென்ற பந்து நடுவர் ரோஹன் பண்டிட்டின் காலில் வேகமாக தாக்கியது.
23
பதறிய வீரர்கள்; என்ன நடந்தது?
இதனால் அவர் வலியால் அலறித்துடித்தார். அவரால் நிற்கக்கூட முடியாமல் களத்தில் படுத்து விட்டார். இதனால் சஞ்சு சாம்சனும், தென்னாப்பிரிக்கா வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இரு அணிகளை சேர்ந்த பிசியோதெரபிஸ்டுகள் தரையில் விரைந்தனர். இதன்பின்பு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்ட பிறகு நடுவர் ரோஹன் பண்டிட் மீண்டும் நடுவர் பணியை தொடர்ந்தார். இதன் பிறகே வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
33
சஞ்சு சாம்சன் சூப்பர் பேட்டிங்
சுப்மன் கில் காயம் அடைந்து வெளியேறியதால் ஒருவழியாக 5வது டி20 போட்டியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அவர் 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடங்கும்.