ஆத்தாடி! என்னா அடி! மோடி மைதானத்தில் சேட்டனின் சம்பவம்.. கோலி சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!

Published : Mar 08, 2026, 08:37 PM ISTUpdated : Mar 08, 2026, 08:57 PM IST

நடப்பு உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் 3 அரை சதங்களுடன் 321 ரன்கள் விளாசியுள்ளார். ஒரு டி20 உலகக்கோப்பையில் இந்தியர் ஒருவரின் அதிகப்பட்ச ரன்கள் இதுவாகும்.

PREV
14
சஞ்சு சாம்சன் அரை சதம்

டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம் அடித்து சாதனை படைத்தார். ‍வெறும் 46 பந்துகளில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரியுடன் 89 ரன்கள் விளாசினார். மிக முக்கியமான வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் விளாசிய சஞ்சு சாம்சன், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் அரை சதம் விளாசினார்.

24
விராட் கோலி சாதனை முறியடிப்பு

இன்றைய போட்டியிலும் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் 3 அரை சதங்களுடன் 321 ரன்கள் விளாசியுள்ளார். ஒரு டி20 உலகக்கோப்பையில் இந்தியர் ஒருவரின் அதிகப்பட்ச ரன்கள் இதுவாகும். விராட் கோலி இதற்கு முன்பு 5 இன்னிங்ஸ்களில் 319 ரன்கள் எடுத்திருந்ததை சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார். இஷான் கிஷன் நடப்பு உலகக்கோப்பையில் 9 இன்னிங்ஸ்களில் 317 ரன்கள் எடுத்துள்ளார்.

34
அதிக சிக்சர்கள் விளாசி சாதனை

மேலும் டி20 உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அரைசதம் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை சிக்ஸர்களால் திணறடித்த சாம்சன், ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம், ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் (21) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

44
டி20 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள்

இது தவிர டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார். இதற்கு முன்பு இலங்கையின் மகிலா ஜெயவர்த்தனே, இந்தியாவின் விராட் கோலி, பாகிஸ்தானின் பாபர் ஆசம், இந்தியாவின் கே.எல். ராகுல், இலங்கையின் குசல் மெண்டிஸ், பர்ஹான் ஆகியோர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories