அரையிறுதியில் தோற்று வெளியேறிய தென்னப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு தலா $7,90,000 (₹7.24 கோடி) கிடைக்கும். சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு தலா $3,80,000 (₹3.48 கோடி) கிடைக்கும். குரூப் சுற்றில் வெளியேறிய அணிகளுக்கு $2,50,00 (₹2.29 கோடி) கிடைக்கும்.
லீக் சுற்றில் வெளியேறினாலும் பரிசு உண்டு
2026 டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக ரூ.120 கோடிகளுக்கு மேல் பரிசுத்தொகை வழங்கப்படும் நிலையில், 2024 டி20 உலகக்கோப்பையை விட இது 20% அதிகம் ஆகும். லீக் சுற்றில் வெளியேறும் அணிகள் கூட வெறும் கையுடன் செல்லாமல் இருக்க, ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் ₹2.29 கோடி வரை பரிசு வழங்கப்படுவது 2026 டி20 உலகக்கோப்பையின் சிறப்பம்சமாகும்.