இந்திய அணியில் இடத்தை தக்கவைக்கும் நெருக்கடியில் ஜடேஜா..!

First Published Aug 12, 2022, 6:10 PM IST

இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க வேண்டுமென்றால், தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியாவை போல தன்னாலும் பேட்டிங் ஆடமுடியும் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரவீந்திர ஜடேஜா இருப்பதாக சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.
 

ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை அடுத்தடுத்து நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. 
 

டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், ஆசிய கோப்பையில் ஆட வாய்ப்பு கிடைக்கும் வீரர்கள் தங்களை நிரூபித்தாக வேண்டும். ஏனெனில் அணியில் இடம்பெற வீரர்களுக்கு இடையே அந்தளவிற்கு கடும் போட்டி நிலவுகிறது.

ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என உள்ளது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர். தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் ஃபினிஷராக இடம்பிடித்திருக்கும் நிலையில், தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் இடம்பெறும் பட்சத்தில் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவை 5வது பவுலராக பயன்படுத்த நேரிடும்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையின் டாப் 3 பேட்டிங் ஆர்டர்..! 2 இடத்திற்கு 4 வீரர்களுக்கு இடையே போட்டி

ஹர்திக் பாண்டியாவாலும்  அதிரடியாக போட்டியை முடித்து கொடுக்க முடியும். ஆனால் அண்மைக்காலமாக ஃபினிஷிங் ரோலை செவ்வனே செய்து அந்த இடத்தை பிடித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். ஆனால் அவரது இருப்பு இந்திய அணியின் பேலன்ஸை பாதிக்கும். எனவே ஜடேஜா அந்த இடத்தை பிடிக்கும்பட்சத்தில், ஜடேஜா அணியில் தனது இடத்தை உறுதி செய்யலாம்.

ஜடேஜா ஒரு தேர்ந்த மற்றும் சிறந்த ஆல்ரவுண்டர். 3 விதமான போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஜொலித்துவருபவர். ஆனால் இப்போது அவரை மாதிரியான இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டரான அக்ஸர் படேலும் ஜொலிக்க தொடங்கிவிட்டார். அவரும் பேட்டிங் திறமையை வளர்த்துக்கொண்டு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் வெள்ளைப்பந்து போட்டிகளில் இந்தியாவிற்காக போட்டிகளை ஜெயித்து கொடுத்திருக்கிறார். இதன்மூலம் ஜடேஜாவிற்கு கடும் போட்டியாளராக இருந்து சவாலளிக்கிறார் அக்ஸர் படேல்.

எனவே ஜடேஜா அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க வேண்டுமென்றால், தன்னால் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியாவை போல போட்டிகளை முடித்து கொடுக்க முடியும் என்று நிரூபிக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க - இந்திய அணியில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இடம்..! இதுதான் பேட்டிங் ஆர்டர்

இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், ஜடேஜா பேட்டிங் ஆல்ரவுண்டராக அவரை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமென்றால், தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியாவை போல பேட்டிங் ஆட வேண்டும். அப்போதுதான் 6 அல்லது 7வது பேட்டிங் ஆர்டரை கைப்பற்ற முடியும். 

அணியில் கடும் போட்டி நிலவுவது அவருக்கும் தெரியும். தேர்வாளர்களுக்கு, அவர் பவுலிங் ஆல்ரவுண்டரா அல்லது பேட்டிங் ஆல்ரவுண்டரா என்பதை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார். அதை பொறுத்துத்தான் அணியில் அவரது இடம் உறுதியாகும். ஜடேஜாவை ஒத்த வீரரான  அக்ஸர் படேல், அவருக்கு கடும் போட்டியாளராக திகழ்கிறார் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.

click me!