IPL 2022: ஐபிஎல் 15வது சீசனின் பெஸ்ட் லெவன்.! சச்சின் டெண்டுல்கரின் அதிரடி தேர்வு

Published : May 31, 2022, 01:54 PM IST

ஐபிஎல் 15வது சீசனின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.  

PREV
17
IPL 2022: ஐபிஎல் 15வது சீசனின் பெஸ்ட் லெவன்.! சச்சின் டெண்டுல்கரின் அதிரடி தேர்வு

ஐபிஎல் 15வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது. 

27

இந்நிலையில், இந்த சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். தொடக்க வீரர்களாக இந்த சீசனில் அதிக ரன்களை (863) ரன்களை குவித்த ஜோஸ் பட்லர் மற்றும் பஞ்சாப் கிங்ஸூக்காக அபாரமாக பேட்டிங் ஆடி 460 ரன்களை குவித்த ஷிகர் தவான் ஆகிய இருவரையும் சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்தார். 
 

37

லக்னோ அணியின் கேப்டனும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுமான கேஎல் ராகுலை 3ம் வரிசையிலும், 4ம் வரிசையில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியாவையும் தேர்வு செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். முதல் சீசனிலேயே கேப்டன்சியில் அனைவரையும் கவர்ந்து கோப்பையையும் வென்ற ஹர்திக் பாண்டியாவைத்தான் கேப்டனாக தேர்வு செய்துள்ளார் சச்சின்.

47

गुजरात टाइटंस के कप्तान हार्दिक पांड्या ने अपने ऑफिशल इंस्टाग्राम पर जीत के जश्न की तस्वीरें शेयर की और लिखा कि, चैंपियन, यह हमारे द्वारा की गई पूरी मेहनत के लिए है! सभी खिलाड़ियों, स्टाफ, प्रशंसकों को बधाई...
(फोटो सोर्स- iplt20.com)

57

5ம் வரிசையில் டேவிட் மில்லரையும், 6ம் வரிசையில் லியாம் லிவிங்ஸ்டோனையும் தேர்வு செய்த சச்சின், ஃபினிஷர் மற்றும் விக்கெட் கீப்பராக ஆர்சிபியின் மேட்ச் வின்னராக ஜொலித்த தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் அபாரமாக பேட்டிங் ஆடி ஆர்சிபி அணிக்காக பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்து கொடுத்தார். அவரது அதிரடியான ஃபினிஷிங்கால் தான், ஆர்சிபி அணி பிளே ஆஃப் வரை வந்தது. லிவிங்ஸ்டோனை அபாயகரமான பேட்ஸ்மேன் என சச்சின் பாராட்டியுள்ளார்.
 

67

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி ஆகிய இருவரையும், ஸ்பின்னர்களாக சாஹல், ரஷீத் கான் ஆகிய இருவரையும் சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்துள்ளார். 
 

77

சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த ஐபிஎல் 2022-ன் சிறந்த லெவன்:

ஜோஸ் பட்லர், ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், லியாம் லிவிங்ஸ்டோன், தினேஷ் கார்த்திக் (விக்கெட்கீப்பர்), ரஷீத் கான், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
 

Read more Photos on
click me!

Recommended Stories