IPL 2022: ஐபிஎல் 15வது சீசனின் சர்ச்சை சம்பவங்கள்..!

First Published May 30, 2022, 11:38 AM IST

ஐபிஎல் 15வது சீசனில் நடந்த மறக்கமுடியாத சர்ச்சை சம்பவங்களை பார்ப்போம்.
 

ஐபிஎல் 15வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்த சீசனில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த சீசனில் சில சர்ச்சை சம்பவங்கள் நடந்தன. அவற்றை பார்ப்போம்.

1. ரிஷப் பண்ட் நோ-பால் சர்ச்சை

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேபிடள்ஸுக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் 3 பந்திலும் ரோவ்மன் பவல் 3 சிக்ஸர் அடித்தார். 3வது பந்து இடுப்பு உயரத்துக்கு மேல் சென்றது. ஆனால் அம்பயர் நோ பால் கொடுக்கவில்லை. அதனால் அதிருப்தியடைந்த ரிஷப் பண்ட் உணர்ச்சிவசப்பட்டு, தன் அணி வீரர்களை களத்தை விட்டு வெளியேறுமாறு செய்கை செய்தார். ரிஷப் பண்ட்டின் செயல்பாடுகடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் விமர்சனத்துக்கும் உள்ளானது. இதே சர்ச்சையில் டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து அம்பயருடன் வாக்குவாதம் செய்தார்.
 

2. ஹர்ஷல் படேல் - ரியான் பராக் சர்ச்சை:

ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது ரியான் பராக் - ஹர்ஷல் படேலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதன்விளைவாக போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் கைகுலுக்கும்போது, ரியான் பராக்கும் ஹர்ஷலும் கைகுலுக்காமல் விலகிச்சென்றனர். எப்பேர்ப்பட்ட சண்டையாக இருந்தாலும் போட்டி முடிந்தபின் கைகுலுக்கிக்கொள்வது வழக்கம். ஆனால் இவர்கள் இருவரும் மறுத்துச்சென்றது சர்ச்சையானது. 
 

3. விராட் கோலி எல்பிடபிள்யூ சர்ச்சை:

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு, சர்ச்சைக்குரிய முறையில் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. பந்து பேட்டிலும் கால்காப்பிலும் ஒரே சமயத்தில் பட்டது. இதில் சரியான முடிவு எட்டப்படமுடியாத நிலையில், சந்தேகத்தின் பலனை கோலிக்கு சாதகமாகத்தான் முடிவு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கள நடுவர் அவுட் கொடுத்ததால், டிவி அம்பயரும், திடமான முடிவு எடுக்கமுடியாத அதற்கு அவுட் கொடுத்தார்.
 

4. சஞ்சு சாம்சன் வைடுக்கு ரிவியூ செய்தது

கேகேஆருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்துகளுக்கு தொடர்ச்சியாக அம்பயர் நிதின் பண்டிட் வைடு கொடுத்தார். கேகேஆர் வீரர்கள் நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே நகர்ந்து நகர்ந்து பேட்டிங் ஆடினர். அதனால் அவர்களை பின்பற்றி பந்தையும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசினார் பிரசித். பேட்ஸ்மேன்கள் நன்றாக நகர்ந்து வரும்போது, இதுமாதிரி வீசப்படும் பந்துகளுக்கு வைடுகொடுக்கப்படாது. ஆனால் அம்பயர் நிதின் பண்டிட் தவறுதலாக வைடு கொடுத்துக்கொண்டே இருந்தார். வைடுக்கெல்லாம் ரிவியூ எடுக்கமுடியாது என்பது தெரிந்தும் கூட, வேண்டுமென்றே தனது அதிருப்தியை பதிவு செய்யும் விதமாக வைடுக்கு ரிவியூ செய்தார் சஞ்சு சாம்சன்.
 

click me!