ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஃபைனலில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தினார். பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஹெட்மயர் ஆகிய ராஜஸ்தான் அணியின் 3 முக்கியமான பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் இக்கட்டான நேரத்தில் களத்திற்கு வந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி 34 ரன்கள் அடித்து குஜராத் அணியை வெற்றி பெறச்செய்தார் பாண்டியா.