ஐபிஎல் 15வது சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி ஃபைனலுக்கு முன்னேற முக்கிய காரணம் ஜோஸ் பட்லர். ஜோஸ் பட்லரின் அதிரடியான பேட்டிங்கால் தான் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
27
Image credit: PTI
இந்த சீசனில் அபாரமாக பேட்டிங் ஆடிய பட்லர், 16 போட்டிகளில் 4 சதங்களுடன் 824 ரன்களை குவித்துள்ளார். ஆர்சிபிக்கு எதிரான முக்கியமான நாக் அவுட் போட்டியில் 60 பந்தில் 106 ரன்களை குவித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். இந்த சதம் இந்த சீசனில் அவரது 4வது சதம். இதன்மூலம் ஒரு சீசனில் அதிக சதங்கள் அடித்த விராட் கோலியின்(2016ல் 4 சதங்கள்) சாதனையை சமன் செய்துள்ளார் பட்லர். ஃபைனலிலும் அவர் நன்றாக ஆடினால் ராஜஸ்தானுக்கு கோப்பை உறுதி.
37
ஜோஸ் பட்லர் நன்றாக ஆடும்போதெல்லாம் ஒரு பெண்ணை டிவியில் காட்டினர். உடனே அவர் தான் பட்லரின் மனைவி என அனைவரும் நினைத்தனர். ஆனால் லாரா என்ற அந்த பெண், ராஜஸ்தான் அணியில் ஆடும் தென்னாப்பிரிக்க வீரர் ராசி வாண்டர் டசனின் மனைவி.
47
இதை அவரே தெளிவுபடுத்தியதுடன், டசனின் மனைவியான தன்னை, பட்லரின் பேட்டிங்கிற்கு cheer செய்ததும் பட்லரின் மனைவி என நினைத்ததாகவும், தனது கணவர் ஆடும் லெவனில் இடம்பெறாததால் பட்லரை உற்சாகப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
57
இந்நிலையில், பட்லரின் உண்மையான மனைவியின் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது. பட்லரின் மனைவி லூயிஸ். ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்தும் லூயிஸுக்கும் பட்லருக்கும் இடையே ஃபிட்னெஸ் மூலம் தான் உறவு வளர்ந்துள்ளது.
67
பட்லர் - லூயிஸ் ஜோடிக்கு 2 பெண் குழந்தைகள். முதல் குழந்தை ஜார்ஜியா ரோஸ். 2019ல் முதல் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தான் ஜார்ஜியா ரோஸ்.
77
பட்லர் - லூயிஸ் (Jos Buttler - Louise Buttler) தம்பதிக்கு 2021ம் ஆண்டு பிறந்த 2வது பெண்குழந்தையின் பெயர் மர்காட்.