IND vs AUS:ஒட்டு மொத்த சுமையை தனது தோளில் சுமந்த ருதுராஜ் கெய்க்வாட் – டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்து சாதனை!

First Published | Nov 28, 2023, 9:10 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Ruturaj Gaikwad 13 Fours, 7 Sixes - 123* Runs

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 போட்டி தற்போது கவுகாத்தி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

India vs Australia Third T20 Match

ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் 3 மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி ஆரோன் ஹார்டி, டிரேவிஸ் ஹெட், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் ஜேசன் பெஹ்ரன்டார்ஃப் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Tap to resize

RuturajG Gaikwad 123* Runs

சீன் அபாட், ஆடம் ஜம்பா, ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ ஷார்ட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியைப் பொறுத்த வரையில் முகேஷ் குமாருக்கு இன்று திருமணம் என்பதால், அவருக்குப் பதிலாக ஆவேஷ் கான் அணியில் இடம் பெற்றுள்ளார்.

Ruturaj Gaikwad Century

இந்தியா:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், திலக் வர்மா, அக்‌ஷர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா:

ஆரோன் ஹார்டி, டிரேவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன்

India vs Australia 3rd T20

இதையடுத்து முதலில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காலம் ஷாக் கொடுத்தார். அதன் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சூர்யகுமார் யாதவ் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி 10 ஓவருக்கு 80 ரன்கள் எடுத்தது.

IND vs AUS 3rd T20

முதல் 33 பந்துகளில் தனது 4ஆவது அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட், அதன் பிறகு கடைசி 19 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை அதிர வைத்தார். முதல் 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த அவர், அடுத்த 35 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார்.

Ruturaj Gaikwad

கிளென் மேக்ஸ்வெல் வீசிய கடைசி ஓவரில் மட்டுமே 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் எடுக்க மொத்தமாக அந்த ஓவரில் மட்டுமே 30 ரன்கள் கிடைத்தது. கடைசியில் அதிரடியாக விளையாடிய கெய்க்வாட் 52 பந்துகளில் 102 ரன்கள் அடித்து டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதம் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

Ruturaj Gaikwad Maiden T20 Cricket Century

இதற்கு முன்னதாக சுரேஷ் ரெய்னா, தீபக் கூடா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் ஒரு சதம் அடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி (122*) சாதனையை முறியடித்துள்ளார். கடைசியாக ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்ஸ் உள்பட 123     ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Latest Videos

click me!