IND vs AUS: முகேஷ் குமார் இல்லை, ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு: அதிரடி மாற்றங்களுடன் பவுலிங் செய்யும் ஆஸ்திரேலியா!

First Published | Nov 28, 2023, 6:59 PM IST

இந்தியாவிற்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டி20

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த முதல் 2 டி20 போட்டிகள் முறையே இந்திய அணி 2 விக்கெட்டுகள் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூர்யகுமார் யாதவ்

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி இன்று கவுகாத்தி மைதானத்தில் நடக்கிறது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றும்.

Tap to resize

ஆஸ்திரேலியா அணியில் 4 மாற்றம்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் 3 மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி ஆரோன் ஹார்டி, டிரேவிஸ் ஹெட், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் ஜேசன் பெஹ்ரன்டார்ஃப் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

India vs Australia 3rd T20 Match

சீன் அபாட், ஆடம் ஜம்பா, ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ ஷார்ட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். எப்படியாவது இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் முகேஷ் குமாருக்கு இன்று திருமணம் என்பதால், அவருக்குப் பதிலாக ஆவேஷ் கான் அணியில் இடம் பெற்றுள்ளார்.

IND vs AUS

இந்தியா:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், திலக் வர்மா, அக்‌ஷர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா:

ஆரோன் ஹார்டி, டிரேவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன்

IND vs AUS 3rd T20

இன்றைய போட்டியில் இந்திய அணி அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டிரேஸ் ஹெட் அணியில் இடம் பெற்றுள்ளார். மேக்ஸ்வெல் வேறு இருக்கிறார். ஆகையால், அதிக ரன்கள் குவித்து ஆஸி அணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.

Latest Videos

click me!