இந்திய அணியின் சுழல், வேகத்தை தாக்க பிடிக்க முடியாமல் சிதறிய ஆஸ்திரேலியா; ஸ்கைக்கு கிடைத்த 2ஆவது வெற்றி!

First Published | Nov 27, 2023, 12:22 AM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Ravi Bishnoi

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டி தற்போது திருவனந்தபுரம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

India vs Australia Second T20

முதல் டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜம்பாவை களத்தில் இறக்கியது. ஆனால், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Tap to resize

Ishan Kishan

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெஸ்வால் 53 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும், இஷான் கிஷான் 52 ரன்களும் எடுத்தனர். கடைசியாக ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 31 ரன்கள் எடுக்க இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது.

IND vs AUS

பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் 2 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Ruturaj Gaikwad

இவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் டிம் டேவிட் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா ஜெயிச்சிடுமோ என்று எண்ணத் தோன்றியது.

Yashasvi Jaiswal

இந்த நிலையில் தான் அக்‌ஷர் படேல் மற்றும் முகேஷ் குமார் இருவரும் இந்த ஜோடியை பிரித்தனர். ஸ்டோய்னிஸ் 4 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று டிம் டேவிட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IND vs AUS T20

அடுத்து வந்த சீன் அப்பாட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை போராடிய கேப்டன் மேத்யூ வேட் 23 பந்துகளில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி உள்பட 42 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Ravi Bishnoi

பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் ரவி பிஷ்னோய் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

India vs Australia 2nd T20

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்றூ கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி வரும் 28ஆம் தேதி கவுகாத்தி மைதானத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!