ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி தக்க வைத்துக் கொண்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததாக தகவல் வெளியாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டைட்டில் வென்றது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் நடத்தப்பட்டது. இதுவரையில் 16 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளது.
211
குஜராத் டைட்டன்ஸ் டிரேட்
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024க்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. - மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா
311
குஜராத் டைட்டன்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்
ஆனால், அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீர்ரகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
411
மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா
அதன்படி, ஒவ்வொரு அணியும் பட்டியலை வெளியிட்ட நிலையில் ஐபிஎல் நிர்வாகத்தின் மூலமாக இறுதி பட்டியல் வெளியிடபட்டது. இதே போன்று டிரேட் முறையிலும் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தங்களது வீரர்களை மாற்றி வருகிறது. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வரையில் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கபட்டுள்ளது.
511
Hardik Pandya Join Mumbai Indians
ஐபிஎல் டிரேட் முறை மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த 24 ஆம் தேதி குஜராத் அணியிலிருந்து விலகி மும்பை அணியில் இணைந்தார்.
611
Gujarat Titans
ஆனால், அவர் இணைந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியே அவரை தங்களது அணியிலேயே தக்க வைத்துக் கொண்டதாக அறிவித்தது. இப்படி மும்பை மற்றும் குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா பெயர் இடம் பெற்று வருவது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
711
Gujarat Titans
மேலும், இது என்ன பைத்தியக்காரத்தனம் என்றும், குஜராத் டைட்டன்ஸ் அணியானது குழப்பத்தில் இருக்கிறது என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும், இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில், ஹர்திக் பாண்டியா எப்போ வேண்டுமானாலும் அதிக தொகைக்கு மற்றொரு அணிக்கு மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. அது, மும்பை இந்தியன்ஸ் அணியாக கூட இருக்கலாம் என்று ஏசியாநெட் தமிழில் செய்தி வெளியிடப்பட்டது.
811
mumbai indians
அதன்படியே தற்போது நடந்துள்ளது. மாலை 5.25 மணிக்கு குஜராத் அணி ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்துக் கொண்டதாக அறிவித்தது. ஆனால், இரவு, 7.25 மணிக்கு டிரேட் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா இணைந்ததாக கூறப்பட்டுள்ளது.
911
Mumbai Indians
அதற்கு கேமரூன் க்ரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு டிரேட் முறையில் சென்றது தான் காரணமாக சொல்லப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீன் ரூ.17.5 கோடிக்கு கடந்த ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார்.
1011
Mumbai Indians
இன்றைய தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் கூட மும்பை இந்தியன்ஸ் அணியில் கேமரூன் க்ரீன் தக்க வைக்கப்பட்டிருந்தார். ஆனால், இன்றைய நேரம் முடிந்ததும், வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரேட் வர்த்தகம் தொடங்கியது.
1111
Cameron Green
அதில், ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் எடுத்துக் கொண்டது. கேமரூன் க்ரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி ஒப்பந்தம் செய்தது. எனினும், வரும் டிசம்பர் 12ஆம் தேதி வரையில் டிரேட் எனப்படும் வர்த்தம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக வீரர்களை மாற்ற நினைத்தால் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.