இதையடுத்து, ஐபிஎல் நிர்வாகம் இறுதி செய்யப்பட்ட தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடும். இந்த நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்த ஜோ ரூட் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து வெளியேறுவதை அந்த அணி உறுதி செய்துள்ளது.
இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் யார் யார் என்பது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஜோ ரூட் இதனை தெரிவித்ததாக அந்த அணியின் இயக்குநர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். மேலும், அவரது இந்த முடிவிற்கு அவரை மதிக்கிறோம். இனி எதிர்காலத்தில் அவர் செய்யும் எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆவேஷ் கான், டிரேடிங் மூலமாக தேவ்தத் படிக்கல்லிற்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்கு டிரேட் மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
99
Joe Root
வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 தொடர் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக ஜோ ரூட் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.