Hardik Pandya:அற்புதமான நினைவுகள்: திரும்ப வந்ததில் மகிழ்ச்சி – மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் ஹர்திக் பாண்டியா!

First Published | Nov 27, 2023, 2:59 PM IST

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தனது எக்ஸ் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

hardik pandya mumbai indians

இந்தியாவில் 17 ஆவது ஐபிஎல் 2024 தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இதற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் டிரேட் முறையில் அணிகளின் வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Hardik Pandya Back to MI

அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் தக்க வைத்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன் அணியில் தக்க வைக்கப்பட்டிருந்தார்.

Tap to resize

Gujarat Titans

இதையடுத்து 10 அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியாவை மும்பை எடுத்துக் கொண்டது. மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்த கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒப்பந்தம் செய்தது.

mumbai indians

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்த ஹர்திக் பாண்டியா 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதில், குஜராத் அணியின் முதல் சீசனில் டைட்டிலும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

Mumbai Indians

2ஆவது சீசன் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது.

Hardik Pandya Mumbai Indians

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தது குறித்து எக்ஸ் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ளார்.

Mumbai Indians

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இது அற்புதமான நினைவுகளை கொண்டு வருகிறது. மும்பை வான்கடே, பல்தான். திரும்ப வந்ததில் மகிழ்ச்சி என்று 2015 ஆம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளது.

Hardik Pandya Mumai Indians

மற்றொரு பதிவில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஹோம் மும்பை இந்தியன்ஸ் ஹோம் என்று குறிப்பிட்டுள்ளார்.  

Latest Videos

click me!