Mukesh Kumar Weds Divya Singh
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார். கடந்த 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பிறந்தார். தந்தை டாக்ஸி பிஸினஸ் காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு குடியேறினார்.
Mukesh Kumar Wedding Photos
முதல் முறையாக ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் விளையாடினார். ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, சையது முஷ்டாக் அலி டிராபி தொடர்களில் விளையாடியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் பீகார் அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் 2024 தொடருக்காக டெல்லி அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார்.
Divya Singh Mukesh Kumar Marriage
கடந்த 20 ஜூலை 2023ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதே மாதம் 27ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.
Mukesh Kumar Wedding Photos
ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய முகேஷ் குமார் 2 விக்கெட்டும், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளும், 4 டி20 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.
Bihar Cricketer Mukesh Kumar Photos
தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் விக்கெட் கைப்பற்றாத முகேஷ் குமார், 2ஆவது டி20 போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
Cricketer Mukesh Kumar Marriage Photos
கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் குமாருக்கும், நெருங்கிய உறவுக்கான பெண்ணும், காதலியுமான திவ்யா சிங்கிற்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்து 8 மாதங்களுக்குப் பிறகு இன்று அவருக்கு திருமணம் நடந்துள்ளது.
Mukesh Kumar Singh Divya Wedding Photos
திருமணம் காரணமாக கவுகாத்தியில் தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் முகேஷ் குமார் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக இன்றைய போட்டியில் ஆவேஷ் கான் இடம் பெற்றுள்ளார்.
Mukesh Kumar Divya Marriage
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 4ஆவது டி20 போட்டி வரும் டிசம்பர் 1ஆம் தேதி ராய்பூரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் முகேஷ் குமார் இடம் பெறுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளார். காதலியை கரம் பிடித்த முகேஷ் குமாருக்கு இன்றைய போட்டியில் டாஸ் போடும் நிகழ்ச்சியின் போது சூர்யகுமார் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மற்ற வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.