IND vs AUS 3rd T20
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 போட்டி தற்போது கவுகாத்தி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Ruturaj Gaikwad
இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினார். அவர் 29 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Team India
அப்போது இந்திய அணி 10.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா இணைந்து அதிரடி காட்டினர். இதில், முதல் 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த ருத்ராஜ் கெய்க்வாட் அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி 35 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார்.
India vs Australia T20
முதல் 33 பந்துகளில் டி20 போட்டியில் தனது 4ஆவது அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த 19 பந்துகளில் 50 ரன்கள் குவித்து 52 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
Ruturaj Gaikwad
இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக சுரேஷ் ரெய்னா, தீபக் கூடா, விராட் கோலி, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஒரு முறை சதம் அடித்துள்ளனர்.
List A, T20 Match, November 28
இந்த ஆண்டில் மட்டும் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா (118), விராட் கோலி 122* மற்றும் சுப்மன் கில் 126* ரன்கள் எடுத்துள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியில் 123* ரன்கள் அடித்ததன் மூலமாக ரோகித் சர்மா, விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
Rohit Sharma
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி லிஸ்ட் ஏ கிரிக்கெட் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்துகளில் 220* ரன்கள் குவித்தார். இதில், 7 சிக்ஸ் அடங்கும். அதே போன்று இன்று நவம்பர் 28ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்ஸ் உள்பட 123* ரன்கள் குவித்துள்ளார்.
Virat Kohli - Shubman Gill
போட்டியில் கடைசி ஓவரை கிளென் மேக்ஸ்வெல் வீசினார். அந்த ஓவரில் மட்டுமே 30 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதில், 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி அடங்கும். அந்த ஓவரில் 30 ரன்கள் வந்ததன் மூலமாக 20 ஓவர்களில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. இதில் ருதுராஜ் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்ஸ் உள்பட 123 (நாட் அவுட்) ரன்களும், திலக் வர்மா 24 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 31 (நாட் அவுட்) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.