முதல் 33 பந்துகளில் டி20 போட்டியில் தனது 4ஆவது அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த 19 பந்துகளில் 50 ரன்கள் குவித்து 52 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக சுரேஷ் ரெய்னா, தீபக் கூடா, விராட் கோலி, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஒரு முறை சதம் அடித்துள்ளனர்.