வெற்றிக்குப் பிறகு கேக் வெட்டி கொண்டாடுவீர்களா? என்ற கேள்விக்கு, "இல்லை சார். எங்களுக்கு காலையில் சீக்கிரம் விமானம் இருக்கிறது. அதனால், இன்று சீக்கிரமாக தூங்கி, சீக்கிரமாக கிளம்ப வேண்டும்," என்று கூறி தனது தொழில்முறைப் பண்பை வெளிப்படுத்தினார். "என் அப்பா, என் பயிற்சியாளர், மற்றும் என் வழிகாட்டி ரோஹித் சர் ஆகியோர் எப்போதும் என்னை ஊக்குவிப்பார்கள். 'இது ஒரு நீண்ட பயணம், இது வெறும் ஆரம்பம்தான். வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், உன் வேலையில் மட்டும் கவனம் வை' என்று அவர்கள் சொல்வார்கள்," என 15 வயதான வைபவ் கூறினார்.
வைபவின் இந்த எளிமையான மற்றும் தெளிவான பேச்சு, சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இவ்வளவு இளம் வயதில், ஸ்டார் பௌலர்களை அசால்ட்டாக எதிர்கொண்ட தைரியமும், போட்டிக்குப் பிறகான அவரது பணிவும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.