Who is Mukul Choudhary?: ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியை வெற்றி பெற வைத்த முகுல் சௌத்ரி, தனக்கு தோனிதான் இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார். யார் இந்த முகுல் செளத்ரி என்பது குறித்து பார்ப்போம்.
ஐபிஎல் 2026 தொடர் கோலாகலமாக நடந்து வரும் நிலையில், ஒவ்வொரு சீசனிலும் இளம் இந்திய வீரர்கள் உருவெடுப்பார்கள். அந்த வகையில் இப்போது உலகம் முழுவதும் பேசப்பட்டும் ஸ்டார் ஆகி விட்டார் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் முகுல் செளத்ரி. நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறந்த ஃபினிஷிங்கில் ஒன்றை சௌத்ரி வெளிப்படுத்தினார்.
அசுரனாக உருவெடுத்த முகுல் செளத்ரி
அதாவது நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 181 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய லக்னோ அணி 16 ஓவரில் 128 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்தது. இந்த கடிமான நிலையில், அசுரனாக உருவெடுத்த முகுல் செளத்ரி வெறும் 27 பந்துகளில் 54 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார். மொத்தம் 7 சிக்சர்களை விளாசினார். இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.
24
முகுல் செளத்ரி மேஜிக் பேட்டிங்
கடைசிப் பந்து வரை சென்ற இந்த த்ரில்லர் போட்டியில், லக்னோ அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற இவருடைய ஆட்டமே உதவியது. ஆவேஷ் கானுடன் இணைந்து சௌத்ரி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சௌத்ரி மற்றும் ஆவேஷ் கான் எடுத்த இந்த 54 ரன் பார்ட்னர்ஷிப் (அவுட் ஆகாமல்), ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான சேஸிங்கில் 8-வது விக்கெட்டுக்கு அல்லது அதற்குக் கீழ் எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
34
தோனி தான் ரோல் மாடல்
தனது ஒரே ஆட்டத்தின் மூலம் ஓவர் நைட்டில் ஹீரோவாகியுள்ளார் முகில் செளத்ரி. இந்த நிலையில், ஆட்டத்துக்கு பிறகு பேசிய செளத்ரி, கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் தனக்கு உத்வேகம் அளித்ததாக கூறியுள்ளார். தானும் ஒரு ஃபினிஷர் என்பதால், எம்.எஸ். தோனியைப் பார்த்துதான் தனக்கு உத்வேகம் கிடைப்பதாக சௌத்ரி கூறினார். தோனியின் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட், 2011 உலகக் கோப்பையில் அவர் இந்திய அணியை வழிநடத்திய விதம் போன்றவை தனக்கு மிகவும் பிடித்தமானவை என்றும், அவரைப் போலவே போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து அணியை ஜெயிக்க வைக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தோனி போல் வருவேன்
இது தொடர்பாக ஜியோ ஹாட்ஸ்டாரில் பேசிய செளத்ரி, ''நான் எப்போதுமே எம்.எஸ். தோனியை ஒரு ரோல் மாடலாகப் பார்க்கிறேன். ஏன் என்றால் நானும் ஒரு ஃபினிஷர். அவருடைய ஹெலிகாப்டர் ஷாட் ரொம்பவே ஃபேமஸ், அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். 2011 உலகக் கோப்பையில் அவர் இந்தியாவை வழிநடத்தியது எல்லோருக்கும் நினைவிருக்கும். அவரைப் போலவே நானும் போட்டிகளை ஃபினிஷ் செய்து, என் அணியை ஜெயிக்க வைக்க ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.
ஒரே இரவில் உலக நாயகனாக உருவெடுத்த முகுல் செளத்ரியின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆகும். இவரது தந்தை சாதாரண அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். செளத்ரி சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டார். தோனியை பார்த்து அவரைப் போலவே வர வேண்டும் என ஆசைப்பட்டார். ஒரு காலத்தில் கிரிக்கெட் உபகரணங்கள் வாங்கவே இவர்களது குடும்பம் சிரமப்பட்டதாகத் தெரிகிறது.
ஆனாலும் செளத்ரியின் தந்தை கடும் சிரமப்பட்டு மகனை பெரிய வீரராக ஆக்கியுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் 2.60 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரைத் தேர்வு செய்தது. அப்போது அவரது குடும்பத்தினர் ஆனந்தத்தில் அழுத வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது கடின உழைப்பு, விடா முயற்சியின் மூலம் முகுல் செளத்ரி இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். ஐபிஎல்லில் இன்னும் பல போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி பெரிய வீரராக உருவெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது.