216 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணி விரட்டியபோது ரோஹித், கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆட்டமிழந்துவிட்ட போதிலும், தனி ஒருவனாக நிலைத்து நின்று இங்கிலாந்து பவுலிங்கை பொளந்துகட்டி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 48 பந்தில் சதமடித்தார். 55 பந்தில் 117 ரன்களை குவித்தார் சூர்யகுமார் யாதவ். ஆனால் 19வது ஓவரில் அவர் ஆட்டமிழந்ததால் 17 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.