2022 T20 WC: இந்த தடவை இந்தியாவை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு ஈசியா இருக்காது! அக்தர் அதிரடி

First Published Jul 11, 2022, 2:49 PM IST

2021 டி20 உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தியதை போல், 2022 டி20 உலக கோப்பையில் வீழ்த்திவிடமுடியாது என்று ஷோயப் அக்தர் கருத்து கூறியுள்ளார்.
 

2021ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறி ஏமாற்றமளித்தது. முதல் போட்டியிலேயே பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து ஏமாற்றமளித்தது. அரையிறுதிக்கு முன்னேறாமலும் வெளியேறியது.
 

ஆனால், இந்திய அணியை பொறுத்தமட்டில் கடந்த டி20 உலக கோப்பையில் இருந்த நிலை இப்போதில்லை. அப்போது விராட்கோலி கேப்டன். இப்போது ரோஹித் சர்மா கேப்டன். ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில், ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில் வலுவான அணியை கட்டமைத்துள்ள இந்திய அணி நிர்வாகம், டி20 உலக கோப்பை தீவிரமாக தயாராகிவருகிறது.

பேட்டிங்கை பொறுத்தமட்டில் கோலியை தவிர மற்ற அனைவரும் அபாரமாக ஆடிவருகின்றனர். ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங் தெறிக்கவிடும் அதேவேளையில், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, ஹர்ஷல் படேல் ஆகியோர் பவுலிங்கை பட்டைய கிளப்புகின்றனர்.

எனவே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே வலுவான, நல்ல பேலன்ஸான அணியாக திகழும் இந்திய அணி, ரோஹித் சர்மா என்ற சிறந்த கேப்டனின் கீழ் அருமையாக ஆடிவருகிறது. இங்கிலாந்து மண்ணில் டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. 216 ரன்கள் என்ற கடினமான இலக்கை சூர்யகுமார் யாதவின் அதிரடி சதத்தால் கிட்டத்தட்ட நெருங்கியது இந்திய அணி. 

எனவே இந்திய அணி இப்போது ஆடிக்கொண்டிருப்பதன் அடிப்படையில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் எளிதாக வீழ்த்தியதை போல இந்த முறை வீழ்த்த முடியாது. 2022 டி20 உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு எளிதாக இருக்காது என்று அக்தர் கூறியுள்ளார்.
 

click me!