கோலியை தூக்கி எறியணுமா..? நண்பன் கோலிக்காக கபில் தேவுக்கு பதிலடி கொடுத்த ரோஹித்

Published : Jul 11, 2022, 05:05 PM IST

விராட் கோலி மோசமான ஃபார்மில் இருந்துவரும் நிலையில், கோலி பற்றி கபில் தேவ் கருத்து கூறியிருந்த நிலையில், இதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கருத்து கூறியுள்ளார்.  

PREV
17
கோலியை தூக்கி எறியணுமா..? நண்பன் கோலிக்காக கபில் தேவுக்கு பதிலடி கொடுத்த ரோஹித்

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும், சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 
 

27

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என எந்தவிதமான போட்டிகளிலும் சரியாக ஆடுவதில்லை கோலி. டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க திறமையான இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அருமையாக ஆடி ஸ்கோர் செய்துவருகின்றனர். 
 

37

அதேவேளையில், கோலி தொடர்ந்து சொதப்பிவருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் சொதப்பியதுடன், டி20 போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பினார். முதல் டி20 போட்டியில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், 2வது போட்டியில் ஒரு ரன்னும், 3வது போட்டியில் 11 ரன்னும் மட்டுமே அடித்தார்.
 

47

கோலி மோசமான ஃபார்மில் உள்ளபோதும், அவரது கடந்த கால பங்களிப்பு என்பதாலும், அவர் உருவாக்கி வைத்துள்ள பிராண்டின் காரணமாகவும் தான் இன்னும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் கோலியின் பிராண்டுக்காக அவருக்கு வாய்ப்பளித்தால், திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடியாமல் போய்விடுகிறது. டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினை உட்காரவைக்க முடியுமென்றால், டி20 போட்டிகளில் கோலியை ஏன் உட்காரவைக்கக்கூடாது என்று கபில் தேவ் கேள்வி எழுப்பியிருந்தார்.

57

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு பின் கோலி பற்றிய கபில் தேவ் கருத்து குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசினார். இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, கபில் தேவ் வெளியிலிருந்து பார்க்கிறார். அணிக்குள் என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியாது. எங்களுக்கென்று சிந்தனை செயல்முறை உள்ளது. அணியை அதன்படி கட்டமைத்திருக்கிறோம். அதற்கு பின்னால் நிறைய சிந்தனைகள் இருந்திருக்கின்றன. 
 

67

அணி வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்து வாய்ப்பளித்துவருகிறோம். எனவே இதெல்லாம் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது. வெளியில் என்ன நடந்தாலும் அவையெல்லாம் முக்கியமல்ல. அணிக்குள் என்ன நடக்கிறது என்பதே முக்கியம் என்றார் ரோஹித் சர்மா.

77
তাহলে কী 'শত্রুতা' অতীত, বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে কপিল দেবকে ধুয়ে দিলেন রোহিত শর্মা

সম্প্রতি বিরাট কোহলির (Virat Kohli) অফ ফর্ম নিয়ে তাকে দল থেকে বসানোর প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন কপিল দেব (Kapil Dev)। এবার বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে কপিল দেবকে উত্তর দিলেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 
 

Read more Photos on
click me!

Recommended Stories