IPL 2025 Auctions: ஆல் டைம் அதிகபட்ச ஏல தொகை சாதனையை முறியடிக்க கூடிய டாப் 3 பிளேயர்ஸ் யார் தெரியுமா?

Published : Sep 13, 2024, 04:30 PM IST

ஐபிஎல் 2024 ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், 2025 ஏலத்தில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

PREV
15
IPL 2025 Auctions: ஆல் டைம் அதிகபட்ச ஏல தொகை சாதனையை முறியடிக்க கூடிய டாப் 3 பிளேயர்ஸ் யார் தெரியுமா?
Mumbai Indians - IPL Highest Paid Players

ஐபிஎல் 2024 ஏலத்தில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது இது தான் முதல் முறை. இவரைத் தொடர்ந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

25
IPL 2025

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தின் போது புதிதாக இடம் பெறும் வீரர்கள் இந்த சாதனையை முறியடிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஐபிஎல் 2025 ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட இருக்கும் டாப் 3 வீரர்கள் யார் என்று பார்க்கலாம் வாங்க.

35
Rohit Sharma - Mumbai Indians

ரோகித் சர்மா:

5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிராபி வென்று கொடுத்த ரோகித் சர்மாவின் தற்போதைய மதிப்பு ரூ.16 கோடி. இந்த தொகையுடன் ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்பு ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டால் அவரது மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை ரூ.50 கோடி வரையில் ஏலம் எடுக்க ஒவ்வொரு அணியும் தயாராக இருக்கின்றன.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ரோகித்தை கேப்டனாக்க ஆர்வமாக உள்ளதாக ஐபிஎல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

45
Delhi Capitals - Rishabh Pant

ரிஷப் பண்ட்:

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஐபிஎல் 2025 ஏலத்தின் ஒரு பகுதியாக இருந்தால் அவரது மதிப்பில் கணிசமான அதிகரிப்பு ஏற்படலாம். தற்போது ரூ.16 கோடிக்காக டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரிஷப்பை சிஎஸ்கே ஏலம் எடுக்க தயாராக இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. கார் விபத்தில் இருந்து அவர் ஈர்க்கக்கூடிய வகையில் திரும்பியதில் இருந்து, பந்த் சிறந்த ஃபார்மில் உள்ளார். 2024 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஏமாற்றமளித்ததைத் தொடர்ந்து, டெல்லி அணியிலிருந்து அவர் விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

55
Philip Salt

பிலிப் சால்ட்:

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரூ. 2 கோடிக்கு விளையாடி வந்த பிலிப் சால்ட் கடந்த சீசனுக்கு முன்னதாக விடுவிக்கப்பட்டார். ஆனால், அவரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன் வராததால் கேகேஆர் அணியில் அடிப்படை விலையான ரூ.1.5 கோடிக்கு இடம் பெற்றார். அவர் அந்த சீசனில் 182.01 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 435 ரன்க குவித்தார்.

இருப்பினும், ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன் அணிகள் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என்று ஐபிஎல் விதிமுறைகள் கட்டாயப்படுத்தினால், கேகேஆர் அவரை விடுவிக்கும் நிலை ஏற்படும். இது நடந்தால், ஏலத்தில் மற்ற உரிமையாளர்களிடமிருந்து பிலிப் சால்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories