ஆர்சிபிக்கு திரும்பும் கேஎல் ராகுல் – கேப்டனாகும் ரோகித் –ஐபிஎல் 2025க்கு முன் RCBல் நடக்கும் 4 மாற்றங்கள்!

First Published | Sep 13, 2024, 12:48 PM IST

2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் பல மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன், வீரர்கள் விடுவிப்பு என பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Royal Challengers Bengaluru - IPL 2025

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் ஒரு அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அங்கம் வகித்து வருகிறது. 17 சீசன்களாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றும் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை. ஆனால், ஆர்சிபிக்கு பிறகு தொடரில் அங்கம் வகித்த குஜராத் டைட்டன்ஸ் கூட டிராபியை தட்டி தூக்கியது.

ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, கெவின் பீட்டர்சன், ஷேன் வாட்சன், விராட் கோலி, ஃபாப் டூப்ளெசிஸ், டேனியல் வெட்ட்ரோரி என்று எத்தனையோ கேப்டன்கள் மாறினாலும் டிராபியை கைப்பற்றாத அணி என்ற பெயர் மட்டும் இன்னும் மாறவில்லை. ஆதலால் 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக அணி நிர்வாகம் பல மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2025 - RCB

இதன் காரணமாக அணிக்கு திறமையும், அனுபவம் வாய்ந்த கேப்டனாக ரோகித் சர்மா போன்ற புதிய கேப்டனை எதிர்பார்க்கும் அதே வேளையில் கேஎல் ராகுல் மீண்டும் ஆர்சிபி அணியால் ஒப்பந்தம் செய்ய முடியும். ஐபிஎல் 2025 ஏலம் தொடர்பாக எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம் என்ற பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அர்சிபி காத்திருக்கும் அதே வேளையில் ஆர்சிபியில் நடக்கக் கூடிய 4 கணிக்கப்பட்ட மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க…

Tap to resize

KL Rahul Return to RCB

ஆர்சிபிக்கு திரும்பும் கேஎல் ராகுல்:

2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி மூலமாக கேஎல் ராகுல் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விடுவிக்கப்படும் பட்சத்தில் ராகுல் ஆர்சிபிக்கு திரும்புவார் என்று ரசிகர்களா நம்பப்படுகிறது. ஐபிஎல் 2025க்கு முன் மெகா ஏலம் இல்லை என்றால் RCB அவரை டிரேடு மூலமாக தங்களது அணியில் இணைத்துக் கொள்ளும்.

ஆர்சிபிக்காக 2 முறை விளையாடியுள்ள ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். தற்போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். ஆர்சிபி அணியில் ராகுல் இடம் பெறுவது என்பது அந்த அணிக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rohit Sharma

கேப்டனாக இணையும் ரோகித் சர்மா:

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடிய ரோகித் சர்மா 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். ஆனால், கடந்த சீசனில் அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இது அணியில் பூகம்பமாக வெடிக்க ரோகித் சர்மா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை பின் தொடர்வதை நிறுத்தினர். இந்த நிலையில் தான் 2025 ஆம் ஆண்டுக்கான ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அவரை விடுவிக்கும் என்று ஐபிஎல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ரோகித் சர்மா விடுவிக்கப்படும் போது அவரை ஆர்சிபி ஏலத்தில் எடுக்கலாம். அதோடு, அவர் கேப்டனாகவும் நியமிக்கப்படலாம். ஏனென்றால், அணிக்கு டிராபி வென்று கொடுக்க அனுபவம் வாய்ந்த ஒரு நல்ல தலைமை தேவை என்பதால், ரோகித் சர்மா ஆர்சிபியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Faf du Plessis

விடுவிக்கப்படும் ஃபாப் டூப்ளெசிஸ்:

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆர்சிபி அணியில் ஃபாப் டூப்ளெசிஸ் ஏலம் எடுக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சிஎஸ்கேயில் அவர் விளையாடியதைக் கண்டு மெர்சலான ஆர்சிபி அவரை தட்டி தூக்கியது. ஆனால், கேப்டன் பொறுப்பை அவரது ஆட்டத்திற்கு தடையானது. RCBக்காக 45 போட்டிகளில் விளையாடி 15 அரைசதங்களுடன் 1636 ரன்கள் எடுத்தார்.

அவரது வயது காரணமாக அவர் ஆர்சிபியிலிருந்து விடுவிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் தற்போது 40 வயதை எட்டிய நிலையிலும் கூட முழு உடல் தகுதியுடன் தான் இருக்கிறார். எனினும் ஆர்சிபியின் எதிர்காலம் கருதி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் அவர் விடுவிக்கப்படலாம். அதோடு, அவரது ஃபார்ம் மற்றும் காயம் ஏற்படும் அபாயம் ஆகியவற்றை கருத்திக் கொண்டு அவர் விடுவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Yuzvendra Chahal

ஆர்சிபிக்கு திரும்பும் யுஸ்வேந்திர சாஹல்:

2022 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் யுஸ்வேந்திர சாஹல் ஆர்சிபி அவரை விடுவித்தது. அதன் பிறகு ஒரு முறை கூட சாஹல் ஆர்சிபியில் ஏலம் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றார். அதிக விக்கெட்டுகள் எடுத்தவரின் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் இடம் பெற்றுள்ள நிலையில் ஆர்சிபி மீண்டும் அவரை திரும்ப இணைத்துக் கொள்ள விரும்புகிறது. ஆதலால், அவர் ஏலம் மூலமாகவோ அல்லது டிரேடு மூலமாக ஆர்சிபியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!