தோல்வியிலும் மோசமான சாதனை – ஜாம்பவான்கள் பட்டியலில் இடம் பிடித்த ரோகித் சர்மா!

First Published | Oct 21, 2024, 6:43 PM IST

List Of Indian Captains Losing Most Home Tests: பெங்களூரு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்த ரோகித் சர்மா, சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய கேப்டன்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

Indian Captains Losing Most Home Tests, Rohit Sharma 3 Test Match Loss

List Of Indian Captains Losing Most Home Tests: இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து மோசமான சாதனையை தனக்கு சொந்தமாக்கி கொண்டுள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி புனேயில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

Indian Captains Losing Most Home Tests, Rohit Sharma

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானத். நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக 356 ரன்கள் முன்னிலையில் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 462 ரன்கள் எடுத்தது.

Tap to resize

Indian Captains Losing Most Home Tests, Rohit Sharma

இதையடுத்து 107 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய நியூசிலாந்து ஆரம்பத்தில் தடுமாறினாலும் இறுதியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த சில ஆண்டுகளான ஹோம் கிரவுண்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்து மோசமான சாதனையை படைத்துள்ளது.

Indian Captains Losing Most Home Tests, Rohit Sharma

இதன் மூலமாக சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த கேப்டன்களின் பட்டியலில் ரோகித் சர்மா இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக சொந்த மண்ணில் தோல்வி அடைந்த கேப்டன்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க…

Indian Captains Losing Most Home Tests, Rohit Sharma

பிஷன் சிங் பேடி, சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரோகித் சர்மா 19 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில், 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளார்.

Indian Captains Losing Most Home Tests, Rohit Sharma

முகமது அசாருதீன், கபில்தேவ்:

முன்னாள் ஜாம்பவான்களான முகமது அசாருதீன் மற்றும் கபில் தேவ் இருவரும் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளை இழந்தவர்களின் பட்டியில் இடம் பெற்றுள்ளனர். 34 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த கபில் தேவ் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். இதே போன்று அசாரூதின் 47 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த நிலையில் 14 போட்டிகளில் வெற்றியும், 14 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார்.

Indian Captains Losing Most Home Tests, Rohit Sharma

நவாப் மன்சூர் அலி கான் பட்டோடி 40 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இதில், 9 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 19 போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறார். அதன் பிறகு சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோர் தலா 3 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் ரோகித் சர்மாவும் 3 போட்டிகளில் தோல்வி அடைந்து இவர்களது பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

Latest Videos

click me!